வீடியோ : பந்துவீச்சாளரின் வேகத்தில் இரண்டு துண்டாக பறந்த கிரிஸ் கெயிலின் பேட் – சிறப்பான சம்பவம்

Gayle
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தற்போது கரீபியன் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய அரையிறுதிப் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணியும், கயானா வாரியர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பூரான் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 178 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 179 ரன்கள் ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 181 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Gayle 1

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய இந்த அரை இறுதிப் போட்டியின்போது செயின்ட் கிட்ஸ் அணியின் தொடக்க வீரராக டி20 கிரிக்கெட் உலகின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் களமிறங்கினார். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய கெயில் 27 பந்துகளை சந்தித்து 42 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின்போது 4-வது ஓவரில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது அதன்படி அந்த நான்காவது ஓவரை கயானா வாரியர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓடியன் ஸ்மித் வீசினார், அவர் வீசிய பந்தை கெயில் அடிக்க முயன்ற போது பந்து பட்ட வேகத்தில் அவரது பேட் இரண்டு துண்டாக உடைந்தது.

அதிவேகத்தில் வந்த அந்த பந்து பேட்டில் பட்டதும் பேட் பறந்தது, கையில் வெறும் ஹேண்டிலும் மீதமுள்ள பேட் மைதானத்தின் தரையிலும் கிடந்தது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது..

Advertisement