IND vs WI : டி20 கிரிக்கெட்டில் 2 ஆல்-டைம் சாதனைகளை படைத்த வெ.இ பவுலர் – ரசிகர்கள் பாராட்டு

McCoy
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதியான நேற்று நடைபெற்று முடிந்தது. வீரர்களின் லக்கேஜ் வருகையால் 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி 11 மணிக்கு தாமதமாக துவங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அந்த அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 31 (31) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 27 (30) ரன்களும் எடுத்தனர்.

Thomas

- Advertisement -

அனலாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓபேத் மெக்காய் 6 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 139 ரன்களை சேசிங் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 8, கேப்டன் நிக்கோலஸ் பூரன் 14, சிம்ரோன் ஹெட்மையர் 6, ரோவ்மன் போவல் 5 என முக்கிய வீரர்களை இந்திய பவுலர்கள் சொற்ப ரன்களில் காலி செய்து வெற்றிக்காக போராடினார்கள். ஆனாலும் 16 ஓவர்கள் வரை நங்கூரமாக பேட்டிங் செய்த தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (52) ரன்கள் எடுக்க கடைசியில் தேவோன் தாமஸ் 31* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார்.

முதல் வெற்றி:
அதனால் 19.2 ஓவரில் 141/5 ரன்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. ஏனெனில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட 2-வது தர இந்திய அணியிடம் அடுத்தடுத்த தொடர் தோல்விகளை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து அவமானத்திற்கு உள்ளானது.

Obed McCoy

அந்த நிலைமையில் தங்களுக்கு மிகவும் பிடித்த டி20 போட்டியில் சிம்ரோன் ஹெட்மையர் போன்ற வீரர்களின் வருகையால் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் மீண்டும் தலை குனிந்தது. அதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான அந்த அணி ஒரு வழியாக இப்போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து டி20 கிரிக்கெட்டில் அவ்வளவு எளிதில் எங்களை வீழ்த்த முடியாது என்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

மிரட்டிய மெக்காய்:
இந்த போட்டியின் முதல் பந்திலேயே இந்தியாவின் முதுகெலும்பான கேப்டன் ரோகித் சர்மாவை கோல்டன் டக் அவுட்டாக்கிய வெஸ்ட் இண்டீஸ் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஓபேத் மெக்காய் முதல் ஓவரை மெய்டனாக வீசி மிரட்டினார். அத்துடன் சூரியகுமார், யாதவ், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் என அடுத்தடுத்த தரமான பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த அவர் இந்தியாவை ஆரம்பத்திலேயே உடைத்தார். இறுதியில் அஷ்வின், புவனேஸ்வர் குமார் ஆகியோரையும் அவுட் செய்த அவர் மொத்தமாக வீசிய 4 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 17 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை 4.25 என்ற இதர பவுலர்களை காட்டிலும் குறைவான எக்கனாமியில் பந்துவீசி வெற்றிக்கு கருப்பு குதிரை செயல்பட்டார்.

அதனால் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பந்து வீச்சாளர் என்ற இரட்டை சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ஓபேத் மெக்காய் : 6/17, 2022*
2. வணிந்து ஹசாரங்கா : 4/9, 2021
3. மிட்சேல் சாட்னார் : 4/11, 2016

- Advertisement -

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர் என்ற 2 ஆல்-டைம் சாதனையையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. ஓபேத் மெக்காய் : 6/17, இந்தியாவுக்கு எதிராக, 2022*
2. கீமோ பால் : 5/15, வங்கதேசத்துக்கு எதிராக, 2018
3. டேரன் சம்மி : 5/26, ஜிம்பாப்வேக்கு எதிராக, 2010

இதையும் படிங்க : IND vs WI : இது எல்லாமே என் அம்மாவுக்காக தான். ஆட்டநாயகன் விருதை வென்ற – வெ.இ வீரர் நெகிழ்ச்சி

கடந்த 2019இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானுக்காக ஃபைனல் வரை செல்ல பந்துவீச்சு துறையில் முக்கிய பங்காற்றி அசத்தினார். இதுவரை 18 சர்வதேச போட்டிகளில் 29 விக்கெட்களை எடுத்துள்ள அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த தலைமுறை பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement