- Advertisement -
உலக கிரிக்கெட்

533 ரன்ஸ் லீட்.. 50வது ஹாட்ரிக்.. அட்கின்ஷன் கலக்கல் சாதனை.. நியூஸிலாந்தை தெறிக்க விடும் இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி வெலிங்டன் நகரில் டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தடுமாற்றமாக விளையாடி 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் சதத்தை அடித்து 123 (115), ஓலி போப் 66 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணிக்கு நாதன் ஸ்மித் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

50வது ஹாட்ரிக்:

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்தை அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பெரிய பின்னடைவை சந்தித்தது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 4, கஸ் அட்கின்ஷன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

குறிப்பாக 34.3, 34.4, 34.5வது பந்துகளில் நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, டிம் சௌதீ ஆகியோரை அவுட்டாக்கிய அட்கின்ஷன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 50வது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன் ஹாட்ரிக் எடுத்த பதினைந்தாவது இங்கிலாந்து வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அபாரம்:

அடுத்ததாக 155 ரன்கள் முன்னிலையுடன் களம் இறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு பென் டக்கெட் – ஜேக்கப் பேத்தல் 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினார்கள். ஆனால் அந்த சதத்தை இருவருமே நழுவ விட்டு பென் டக்கெட் 92, பேத்தல் 96 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்கள்.

இதையும் படிங்க: இது ஒன்னு போதும்.. இனிமே வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் நிதீஷ் ரெட்டி விளையாடுவது கன்பார்ம் – விவரம் இதோ

அதற்கடுத்து வந்த ஓலி போப் 10 ரன்களில் அவுட்டானார். ஆனால் ஜோ ரூட்டுடன் சேர்ந்து அசத்தலாக விளையாடிய ஹரி ப்ரூக் அரை சதத்தை அடித்து 55 ரன்கள் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடும் ஜோ ரூட் அரை சதத்தை அடித்ததால் இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து 378-5 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை விட மொத்தம் 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் ரூட் 73*, பென் ஸ்டோக்ஸ் 35* ரன்களுடன் உள்ளார்கள். அதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

- Advertisement -