கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்று கூறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணி வீரர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து பல அணிகளும், பலநாட்டு ரசிகர்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனெனில் அந்த அளவிற்கு நியூசிலாந்து அணி வீரர்கள் பொறுமையும் அவர்களது மனோபாவமும் களத்தில் நாம் கண்டதே.

அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பவுண்டரிகள் எண்ணிக்கை மூலம் நியூசிலாந்து அணி தோல்வியுற்றது என்று அறிவித்த போதும் அவர்கள் எந்தவித சலனமும் இன்றி அந்த முடிவை ஏற்றுக் கொண்டார்கள். அந்த அளவிற்கு நியூசிலாந்து அணி பொறுமையை கடைபிடித்து வருகிறது.
சமீபத்தில் நியூஸிலாந்து தொடருக்கு முன் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூட அதனை ஒப்புக் கொண்டு நியூசிலாந்து அணியை கண்டால் பழிவாங்கும் எண்ணம் இல்லை ஏனெனில் அவர்கள் எவ்வளவு அன்பாக பழகும் மனம் உடையவர்கள் என்று புகழ்ந்தார். இந்நிலையில் சீனியர் வீரர்கள் மட்டுமல்ல ஜூனியர் வீரர்களும் அதற்கு உதாரணம் என்பதை நியூசிலாந்து அணியின் அண்டர் 19 வீரர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

19 வயதிற்கு உட்பட்ட உலக கோப்பை தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இருந்தாலும் அந்த போட்டியில் நடந்த நிகழ்வு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
An outstanding show of sportsmanship earlier today in the game between West Indies and New Zealand 👏 #U19CWC | #SpiritOfCricket | #FutureStars pic.twitter.com/UAl1G37pKj
— Cricket World Cup (@cricketworldcup) January 29, 2020
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் மெக்கன்சி பேட்டிங் செய்யும்போது தசை பிடிப்பு ஏற்பட்டது அந்த தசைப்பிடிப்பு காரணமாக அவர் கடுமையான வலியால் மைதானத்தில் துடித்துக் கொண்டிருந்தார். பெவிலியனை நோக்கி கூட நடக்க அவருக்கு சக்தி இல்லாத அந்த நேரத்தில் உடனடியாக அவரை அப்படியே கையில் தூக்கி தாங்கியபடி நியூசிலாந்து வீரர்கள் பின் அவரை பெவிலியன் வரை கொண்டு சென்று விட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நியூசிலாந்து இளம் வீரர்களின் இந்த செயலுக்காக பாராட்டுகள் உலகம் முழுவதும் இருந்து குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.



