இங்கிலாந்து அணியை தொடர்ந்து நாங்களும் ஐ.பி.எல் தொடரில் விளையாடமாட்டோம் – ஷாக் கொடுத்த கிரிக்கெட் போர்டு

IPL
IPL Cup
- Advertisement -

ஐபிஎல்லில் பங்கேற்றிருந்த வீர்ர்களுக்கு இடையே கொரானா பரவியதை அடுத்து, இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது பாதியிலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை வருகிற செப்டம்பர் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் நடத்த பிசிசிஐ ஆலோசனை செய்து வந்த நிலையில், ஐபிஎல் தொடர் மீண்டும் நடந்தால் இங்கிலாந்து வீரர்கள் பங்கு பெற மாட்டார்கள் என்று அறிவித்திருந்தார், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக இயக்குனரானா ஆஷ்லே கைல்ஸ். இங்கிலாந்து அணிக்கு தொடர்ச்சியான சர்வதேச போட்டிகள் இருப்பதால், எங்களுடைய வீரர்களை எங்கள் நாட்டு அணிக்காகவே விளையாட வைப்போம் என்று தெரிவித்திருந்தார் அவர்.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வீரர்களும் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அமீரகம் செல்லும் நியூசிலாந்து அணி, அங்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. எனவே அனைத்து நியூசிலாந்து வீர்ர்களும் செப்டம்பர் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பதால், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் பங்கேற்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. மேலும் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்த சிறந்த இடமாக ஐக்கிய அமீரகத்தை பிசிசிஐ கருதியிருந்ததால், அங்கு தான் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கான தொடர் மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடயேயான தொடரும், செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருப்பதால், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் உள்ள நியூசிலாந்து வீரர்கள் பல அணிகளின் முக்கிய வீரர்களாக இருப்பதால், அவர்கள் விளையாடிய அணிகளுக்கும் தற்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

williamson 1

இதில் குறிப்பாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்து அணி வீரரான கேன் வில்லியம்சன் தான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போனால், அது அந்த அணிக்கு பெரும் இழப்பாக அமையும். ஏற்கனவே அந்த அணியில் இருக்கும் இங்கிலாந்து வீரரான ஜானி பேரஸ்டோவும் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் நியூசிலாந்து வேகப் பந்து வீச்சாளரானா ட்ரென்ட் போல்ட், ஜிம்மி நீஷம் ஆகியோரும் அந்த அணிக்காக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

boult

கொல்கத்தா அணியில் பெர்கியூசன் மற்றும் டிம் செய்ஃப்ரட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிட்சல் சாட்னர், பெங்களூர் அணியில் கைல் ஜேமிசன் என பல நியூசிலாந்தின் முன்னனி வீரர்களும் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். ஏற்கனவே கொரனா காரணமாக நின்றுபோன ஐபிஎல்லை எப்படி தொடங்குஙது என்பது குறித்து ஆலோசனையில் இருந்து வரும் பிசிசிஐக்கு, தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளின் வீரர்கள் எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெறாதது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

Advertisement