ஸ்மித்தும் இல்ல, கோலியும் இல்ல. தற்போதைய உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான் – முன்னாள் நியூசி வீரர் தேர்வு

Smith-1
- Advertisement -

சமகால கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ,கேன் வில்லியம்சன் என நான்கு பேரும் ஒருவருக்கு ஒருவர் சரிக்கு சமமான திறமை வாய்ந்தவர்கள். இந்த நான்கு பேரில் விராட் கோலி மற்ற மூவரையும் விட சற்று அதிகமாக திறமை வாய்ந்தவர் என்றே கூறலாம். இந்த மூன்று பேரைத் தவிர விராட் கோலி மூன்று விதமான போட்டிகளிலும் பட்டையைக் கிளப்ப கூடியவர் கோலி.

smith

- Advertisement -

இதன் காரணமாக இந்த நான்கு வீரர்களில் யார் மிகச்சிறந்த வீரர் என்ற விவாதம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டர்னர் பேசியுள்ளார் அவர் கூறுகையில்…
.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமான வீரர் களத்தில் இறங்கி விட்டால் அவருக்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. ஆனால் கேன் வில்லியம்சன் அப்படி இல்லை. மிகவும் நிதானமான மிகவும் பொறுமையானவர். பொறுமையாக இருப்பதால் அவருக்கு வெற்றி வேட்கை இல்லை என்று கூறிவிட முடியாது.

Williamson-1

கடினமான சூழ்நிலைகள் மற்றும் இக்கட்டான நிலையில் அணி இருக்கும்போது விளையாட விராட் கோலியை விட கேன் வில்லியம்சன் மிகச்சிறந்த சரியான தேர்வாகும். விருப்பமான இடங்களில் மட்டுமே விராட் கோலி தனது திறமையை வெளிப்படுத்துகிறார். ஆனால் கேன் வில்லியம்சன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இடங்களில் கூட பேட்டிங் நன்றாக ஆடுகிறார்.

Williamson

இதன் காரணமாகவும் மேலும் சில காரணங்களினாலும் நான் வில்லியம்சன் தான் கோலியை சிறந்த வீரர் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார் டர்னர். இவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்திய ரசிகர்கள் பலரும் இந்த கருத்திற்கு எதிராக கோலியை ஆதரித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement