வீரர்கள் மட்டுமில்லை. இனிமே இவங்க தப்பு செஞ்சாலும் தண்டனை உறுதி – நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

Archer

நியூசிலாந்து சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டிற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Nz vs Eng

இந்நிலையில் அந்த தொடரில் நடந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரை கடைசி நாள் ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் அவரது நிறம் குறித்து இனம்வெறியை தூண்டும் வகையில் நடந்துகொண்டார். இதனை ஆர்ச்சர் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்து இருந்தார். அப்போது அவர் வெளியிட்ட பதிவில் :

ஒரே ஒரு ரசிகரை தவிர மற்ற ரசிகர்கள் மிக சிறப்பாக இருந்தனர். வழக்கம்போல “பார்மி ஆர்மி” ரசிகர்கள் அசத்தலாக வரவேற்பை தந்தனர். ஆனால் இனம் குறித்த விமர்சனம் மட்டுமே எனக்கு பேட்டிங் செய்யும்போது தொந்தரவாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். ஆர்ச்சர் அண்டர் 19 அணியில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்காக விளையாடினார். அதன்பின்னர் அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார்.

Archer 1

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்பது மட்டுமின்றி அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்திருந்தது.

- Advertisement -

Archer

தற்போது இந்த சம்பவத்திற்கு காரணமானவரை கண்டுபிடித்து அவருக்கு நியூஸிலாந்தில் நடக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டியை காண 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அந்த ரசிகர் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தண்டை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.