- Advertisement -
உலக கிரிக்கெட்

88/8 டூ 168.. உலக சாதனை பார்ட்னர்ஷிப் போட்டு வெறித்தனமான போராடி வீழ்ந்த வெ.இ.. நியூஸிலாந்து த்ரில் வெற்றி

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில் 2வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. அதனால் சமநிலைப் பெற்ற அத்தொடரின் 3வது போட்டி நியூசிலாந்தில் உள்ள நெல்சன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.45 மணிக்குத் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து 20 ஓவரில் போராடி 177/9 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 56 (34), டேரில் மிட்சேல் 41 (24), ரச்சின் ரவீந்திரா 26 (15), டிம் ராபின்சன் 23 (21) ரன்களை எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர், மேத்தியூ போர்ட்ஜ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

உலக சாதனை பார்ட்னர்ஷிப்:

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அமீர் ஜாங்கோ 5, கேப்டன் சாய் ஹோப் 1 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் நிதானமாக விளையாடிய அலிக் அதனாஸ் 31 (23) ரன்களும் அக்கீம் அகஸ்ட்டி 24 (16) ரன்களும் அடித்து விக்கெட்டை இழந்தனர். ஆனால் லோயர் ஆர்டரில் ரூத்தர்போர்ட் 1, ரோவ்மன் போவல் 2, ஜேசன் ஹோல்டர் 3, மேத்தியூ போர்ட்ஜ் 4 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவைக் கொடுத்தனர்.

அதனால் 12.3 ஓவரில் 88/8 என சரிந்த வெஸ்ட் இண்டீஸ் தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது ஜோடி சேர்ந்த ரொமாரியா ஃசெபார்ட் மற்றும் சமர் ஸ்ப்ரிங்கர் ஆகியோர் நியூசிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டனர். 19 ஓவர்கள் வரை வெறித்தனத்துடன் போராடிய அந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

நியூஸிலாந்து த்ரில் வெற்றி:

அப்போது ஸ்ப்ரிங்கர் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 39 (20) ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் 9வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையை ரொமாரியா ஃசெபார்ட் – சமர் ஸ்ப்ரிங்கர் படைத்தனர். இதற்கு முன் 2022ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 9வது விக்கெட்டுக்கு ரொமாரியா ஃசெபார்ட் – ஆக்கில் ஹொசைன் 72* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய மண்ணில் ஜோடியாக அசத்தல் சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா – விவரம் இதோ

தொடர்ந்து நடைபெற்ற கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது செஃபார்ட் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 49 (34) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதனால் 19.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸை 168 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூஸிலாந்து வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 1- (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. நியூஸிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி இஸ் சோதி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -