நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றது. அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் இதையும் படிங்க:தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது. அதில் டி20 தொடரில் விளையாடாத முகமது ரிஸ்வான், பாபர் அசாம் உள்ளிட்ட நட்சத்திரம் மூத்த வீரர்கள் விளையாடுகின்றனர்.
அதன் காரணமாக நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி நேப்பியர் நகரில் முதல் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானை அடித்து நொறுக்கி 50 ஓவரில் 344-9 ரன்கள் குவித்தது.
நியூஸிலாந்து அசத்தல்:
வில் எங் 1, நிக் கேலி 15, ஹென்றி நிகோலஸ் 11 ரன்னில் அவுட்டானதால் 50-3 என நியூசிலாந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய மார்க் சேப்மன் 13 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதத்தை அடித்து 132 (111) ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் டேரில் மிட்சேல் 76 (84), முஹம்மது அப்பாஸ் 52 (26) ரன்கள் குவித்து கை கொடுத்தனர்.
சுமாராக பவுலிங் செய்த பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக இர்பான் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக் 36, உஸ்மான் கான் 39, கேப்டன் முகமது ரிஸ்வான் 30 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். அடுத்து வந்த பாபர் அசாம் அரை சதத்தை அடித்து 78 (83) ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்தார்.
பாகிஸ்தானின் பரிதாபம்:
அதனால் 249-3 என்ற நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தான் கண்டிப்பாக வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது பாபர் அசாம் அவுட்டானதும் அடுத்து வந்த தாயம் தாகிர் 1, இர்பான் கான் 0, நாசீம் ஷா 0, ஹரிஷ் ரவூப் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். இறுதியில் சல்மான் ஆகா 58 (48) ரன்கள் எடுத்து போராடியும் 44.1 ஓவரில் பாகிஸ்தானை 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூஸிலாந்து 73 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடைசி 22 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் கையில் வைத்திருந்த வெற்றியை “இந்தாங்க வைத்துக் கொள்ளுங்கள்” என்ற வகையில் நியூசிலாந்திடம் தாரை வார்த்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது. குறிப்பாக கடைசி 6 விக்கெட்டுக்கு பாகிஸ்தான் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் வாயிலாக ஒரு ஒருநாள் போட்டியில் கடைசி 6 விக்கெட்டுக்கு 3வது குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான உலக சாதனையையும் பாகிஸ்தான் படைத்துள்ளது.
இதையும் படிங்க: எப்படியும் சிஎஸ்கே ஜெய்க்காதுன்னு சீக்கிரம் வந்துட்டாரே.. தோனியை கலாய்த்த சேவாக்.. 9இல் வந்த காரணம் பற்றி பேட்டி
முதல் 2 இடங்களில் ஜிம்பாப்வே (2008இல் இலங்கைக்கு எதிராக 0 ரன்கள்), கென்யா (2011இல் பாகிஸ்தானுக்கு எதிராக 2 ரன்கள்) உள்ளன. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரிலும் நியூஸிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நாதன் ஸ்மித் 4, ஜேக்கப் டுபி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.



