49/5 என சரிந்த நியூசிலாந்து.. மழையை தாண்டி வங்கதேசத்திடம் சந்திக்க வேண்டிய அவமானத்திலிருந்து தப்பியது எப்படி?

BAN vs NZ
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இழந்தது. மறுபுறம் முதன்மை வீரர்கள் இல்லாமல் சொந்த மண்ணில் நியூசிலாந்து தொடரை வெற்றது. ஆனாலும் கடைசி போட்டியில் வென்ற வங்கதேசம் முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் வென்று சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் ஒரு டி20 போட்டியில் வென்று மாபெரும் சாதனை படைத்தது. இருப்பினும் அதன் பின் நடந்த 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் முக்கியமான 3வது போட்டி டிசம்பர் 31ஆம் தேதி மவுண்ட் மவுங்கனி நகரில் நடைபெற்றது.

- Advertisement -

தப்பிய நியூஸிலாந்து:
அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.2 ஓவரில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் சாண்டோ 17, தௌஹீத் ஹ்ரிடாய் 16 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 4 விக்கெட்களை எடுத்து அசத்தினார்.

அதைத்தொடர்ந்து 111 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஒருபுறம் துவக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் டிம் சைபர்ட் 1, டார்ல் மிட்சேல் 1, கிளன் பிலிப்ஸ் 1, மார்க் சேப்மேன் 1 என 4 முக்கிய பேட்ஸ்மேன்கள் சொல்லி வைத்தார் போல தலா 1 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். போதாகுறைக்கு மறுபுறம் அசத்தலாக விளையாடிய ஃபின் ஆலனும் 38 (31) ரன்களில் ஆட்டமிழந்ததால் 8.3 ஓவரில் 49/5 என நியூசிலாந்து பெரிய சரிவை சந்தித்தது.

- Advertisement -

அதனால் அந்த அணி வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்த போது ஜிம்மி நீசம் வந்து அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 28* (20) ரன்களும் கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 18* (20) ரன்களும் விளாசி சரிவை சரி செய்தார்கள். அதனால் 14.4 ஓவரில் நியூசிலாந்து 95/5 ரன்கள் எடுத்து வெற்றியை நெருங்கிய போது மழை வந்து போட்டியை தடுத்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி 14.4 ஓவரில் 79 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய நியூசிலாந்து 95/5 ரன்கள் எடுத்திருந்தது.

இதையும் படிங்க: அவருக்கும் பயம் வரும் இல்ல.. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா – செய்த செயல்

அதன் காரணமாக இப்போட்டியில் நியூசிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் மெஹதி ஹசன் மற்றும் சோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வங்கதேசம் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் போராடி வென்ற நியூசிலாந்து 1 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்தது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு டி20 தொடரில் சந்திக்க வேண்டிய அவமான தோல்வியை தவிர்த்த நியூசிலாந்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

Advertisement