100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் 500 விக்கெட்டுகளை இவரால் வீழ்த்த முடியும் – நிடினி ஓபன்டாக்

ntini
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மக்காயா நிடினி சர்வதேச கிரிக்கெட்டில் 101 டெஸ்ட் போட்டிகளிலும், 123 ஒருநாள் போட்டிகளிலும் 10 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள அனுபவம் உடையவர். தனது கரியரில் மிகச்சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த அவர் தற்போது மற்றொரு தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான ரபாடாவை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரபாடா தனது 50வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

Rabada

- Advertisement -

26 வயதிலேயே 50 போட்டிகளில் விளையாடியுள்ள ரபாடா 230 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் ரபாடா குறித்து பேசிய நிதினி கூறுகையில் : ரபாடா உண்மையிலேயே ஒரு வலிமையான பந்துவீச்சாளர். மிக வேகமாக பந்து வீசும் பலம் அவரது உடல் மொழியிலேயே இருக்கிறது.

எல்லா விதமான பந்துகளையும் அவர் சிறப்பாக வீசுவதால் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். என்னை பொருத்தவரை தற்போது 50 டெஸ்டில் 230 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது அவரால் 500 விக்கெட் கைப்பற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

rabada

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரபாடா இளம் வீரர் என்பதனால் நிச்சயம் இன்னும் 10 ஆண்டுகள் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியும். அதில் அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறாரோ அதுவரை நிச்சயம் சிறப்பாக விக்கெட் வீழ்த்துவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : உண்மையிலே சொல்றேன் கோலியை இந்த விஷயத்துல அடிச்சிக்க ஆளே இல்ல – ரபாடா புகழாரம்

இதுவரை தென்ஆப்பிரிக்க அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் 500 விக்கெட் வீழ்த்தியது கிடையாது. டேல் ஸ்டெயின் 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பொல்லாக் 421 ஒரு விக்கெட் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்ததாக நிடினி 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement