ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி காலம் காலமாக டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. அந்த கதையை விராட் கோலி தலைமையில் மாற்றிய இந்திய அணி 2018 – 19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வென்று சரித்திரம் படைத்தது. அத்தோடு நிற்காத இந்தியா 2020 – 21 பார்டர் – கவாஸ்கர் தொடரையும் ஆஸ்திரேலியாவில் வென்றது.
குறிப்பாக 36க்கு ஆல் அவுட்டான இந்தியா முதல் போட்டியிலேயே வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த 2 தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.
ரிஷப் பண்ட் கிடையாது:
முன்னதாக அத்தொடரில் காபாவில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் 89* ரன்கள் குவித்தார். அதனால் வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய அவர் காபா மைதானத்தில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சரித்திர வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.
அதனால் 2020 – 21 பார்டர் – கவாஸ்கர் கோப்பை மற்றும் காபா மைதானத்தில் பெற்ற வெற்றிக்கு ரிஷப் பண்ட்டை அனைவரும் அதிகம் பாராட்டுவது வழக்கமாகும். இந்நிலையில் உண்மையாகவே அந்தத் தொடரை இந்தியா வெல்வதற்கு செட்டேஸ்வர் புஜாரா தான் முக்கிய காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
உண்மையான ஹீரோ புஜாரா:
“ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றியதாக நிறைய மக்கள் பேசியதை நினைவில் வைத்துள்ளேன். ஆனால் அந்தத் தொடரை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர் புஜாரா. அவர் எங்களை வீழ்த்தினார். அவர் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை வீழ்த்தினார். உ
தன்னுடைய உடலில் நிறைய அடிகளை வாங்கிய அவர் தொடர்ந்து எழுந்து நின்றார்”
இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவை பாத்து தான் அந்த விஷயத்தை கத்துக்கிட்டேன்.. நிச்சயம் கம்பேக் கொடுப்பேன் – இஷான் கிஷன் உறுதி
“டெஸ்ட் கிரிக்கெட்டில் அது போன்ற ஆட்டத்திற்கு இன்னும் இடம் இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல 2018 – 19 தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த புஜாரா தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் முதல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல 2020 – 21 தொடரில் 271 ரன்கள் அடித்த அவர் பாறையை போல் உடம்பில் நிறைய பந்துகளை அடி வாங்கி ஆஸ்திரேலிய பவுல்களை களைப்படைய வைத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.