ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் நகரில் 8வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் 196-7 ரன்கள் எடுத்து அசத்தியது.
அந்த அணிக்கு பில் சால்ட் ஆரம்பத்திலேயே சென்னை அடித்து நொறுக்கி 32 (16) ரன்களை எடுத்து சவாலைக் கொடுத்தார். அப்போது நூர் அகமது வீசிய பந்தில் அவரை தோனி அபாரமாக ஸ்டம்பிங் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஏனெனில் பந்தை தவற விட்ட சால்ட் தம்முடைய காலை வெள்ளைக் கோட்டுக்குள் கொண்டு வந்தார்.
தோனியின் மாஸ் ஸ்டம்பிங்:
அந்த சமயத்தில் வெள்ளைக் கோட்டுக்கு மேலே அவரது கால் ஒரு நொடி மட்டுமே காற்றில் இருந்திருக்கும் என்று சொல்லலாம். அந்த நேரத்தில் கச்சிதமாக மின்னல் வேகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி 43 வயதானாலும் தமது ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 31, கேப்டன் ரஜத் படிதார் 51, தேவ்தூத் படிக்கல் 27 ரன்கள் எடுத்தனர்.
கடைசியில் ஜிதேஷ் சர்மா 12, டிம் டேவிட் 22* ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் செய்தனர். சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 3, பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தது அசத்தினார்கள். கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற நூர் அஹ்மத் இந்தப் போட்டியையும் சேர்த்து 7 விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை தன்வசமாக்கியுள்ளார்.
ஊதா தொப்பி நூர்:
இந்நிலையில் இந்த ஊதா தொப்பியை சென்னை அணிக்காக இந்த வருடம் முழுவதும் வைத்திருப்பேன் என்று நூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தோனி விக்கெட் கீப்பராக இருப்பது பற்றியும் இன்றைய சேப்பாக்கம் பிட்ச் பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “ஊதா தொப்பிக்காக உண்மையில் நன்றியுடையவனாக இருக்கிறேன். இதைத் தொடர் முடியும் வரை வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். பிட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது”
இதையும் படிங்க: ஆஸியை இந்தியா செமி ஃபைனலில் எதிர்கொள்வதே பெஸ்ட்.. பிசிசிஐ ஸ்ட்ரிக்டாக அவங்க தான் காரணம்.. குல்தீப்
“அதில் அதிகம் சுழல் இல்லை. அதில் என்னுடைய லென்த் பந்துகளை பவுலிங் செய்ய விரும்பினேன். அந்தளவுக்கு சிறந்த ஸ்டம்பிங் செய்த தோனி விக்கெட் கீப்பராக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்தவனாக உணர்கிறேன். பிட்ச் நன்றாக தெரிகிறது. நாங்கள் நல்ல துவக்கத்தைப் பெற்று சேசிங் செய்ய வேண்டும். அனைவரும் நான் எடுத்த விராட் கோலியின் விக்கெட்டை அனுபவித்திருப்பார்கள்” என்று கூறினார்.



