நேற்றைய போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளின் மூலம் முக்கிய மைல்கல்லை தொட்ட – ஆப்கான் வீரர் நூர் அகமது

Noor Ahmad
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டியில் சி.எஸ்.கே அணி சார்பாக விளையாடிய நட்சத்திர இளம் சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு சென்னை அணியின் வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

ஐ.பி.எல் போட்டிகளில் நூர் அகமது நிகழ்த்திய சாதனை :

ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 21 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது நேற்றைய போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

கடந்த 2023-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான நூர் அகமது இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் 42 ஆட்டங்களில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டிக்கு முன்னதாக 49 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அவர் நேற்றைய போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் ஐ.பி.எல் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

அதோடு ஐ.பி.எல் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் நிகழ்த்தினார். தற்போது 21 வயதான அவர் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 201 ஆட்டங்களில் விளையாடி 233 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் அந்த அணிக்காக இரண்டு சீசன்களில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இரு அணி வீரர்கள் – என்ன காரணம்?

அதன்பின்னர் அவரது திறமையை உணர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்தின் போது அவரை 10 கோடி என்கிற மிகப்பெரிய தொகைக்கு எடுத்திருந்தது. இந்த 2026 ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் கடந்த இரண்டு ஆட்டங்களாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி சென்னை அணியின் வெற்றிக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement