100 டி20 போட்டிகள்..! வெற்றியில் தொட முடியாத உயரத்தில் இந்தியா..! தோனி படைத்த சாதனை..!

india

இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக பல சாதனைகளை புரிந்துள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணியும் இந்திய வீரர்களும் சில சாதனைகளை புரிந்தனர் . இந்நிலையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்ற ஐயர்லாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
dhonistand
இந்திய அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஐயர்லாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டப்ளினில் மைதானத்தில் கடந்த புதன் கிழமை(ஜூன் 27) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்திய அணிக்கு 100 வது டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 100வது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி தனது 63 வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் 100 போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்துளளது. இந்தியாவிற்கு பிறகு 59 வெற்றிகளுடன் தென்னாபிரிக்கா அணி இரண்டாவது உள்ளது.
indiateam

சர்வதேச கிரிக்கெட் அணிகளில் நூறு டி20 போட்டிகளில் விளையாடி அதிகப்படியான வெற்றிகளை பெற்றுள்ள அணிகளில் விவரம்.

முதல் இடம் – இந்தியா (63)

இரண்டாம் இடம் -தென் ஆப்ரிக்கா – (59)

மூன்றாம் இடம் -பாகிஸ்தான் – (58)

நான்காம் இடம் – ஆஸ்திரேலியா -( 53 )

ஐந்தாம் இடம் -இலங்கை – (51 )