ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு நிச்சயமாக இந்த சலுகை கிடையாது – கெடுபிடி காட்டிய ஆஸி நிர்வாகம்

Nic
- Advertisement -

14 வது ஐபிஎல் லீக் தொடர் இந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மறுபக்கம் இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் இந்த மாதிரியான நேரத்தில் ஐபிஎல் தொடர் நடத்துவது சரிதானா என்று தொடர் கேள்விகளை எழுப்பி வந்தனர். இருப்பினும் பிசிசிஐ ஐபிஎல் தொடரை தற்போது வரை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

IPL

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் மே 15ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. தடையை மீறி வரும் விமானங்களோ அல்லது விமானத்தில் வரும் பயணிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் உட்பட ஆஸ்திரேலியாவைச் சார்ந்த சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்துள்ளனர். ஆனால் மே 15ம் தேதி வரை ஆஸ்திரேலியா செல்லும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளதால், அவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிடம் எங்களை அழைத்துச் செல்ல தனி விமானங்களை ஏற்பாடு செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ipl-2021

இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அல்லது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கோ சிறப்பு விமானங்கள் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. தற்பொழுது அது சம்பந்தமாக உடனடியாக முடிவும் எடுக்க முடியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய சிஇஓ நிக் ஹாக்லி  வெளிப்படையாக கூறிவிட்டார். இவர் கூறியுள்ள செய்தி அனைவருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Stoinis-2

இதனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அனைவரும் எப்படி ஆஸ்திரேலியா செல்வது என திக்குமுக்காடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது சம்பந்தமாக பிசிசிஐ இடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்கிற செய்தியும் வந்துள்ளது.

Advertisement