இன்றைய 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலும் இஷான் கிஷனுக்கு இடமில்லை – இதுதான் காரணம்

Ishan-Kishan
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட வேளையில் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று டிசம்பர் 14-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தயாராக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனுக்கு இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெற்றுள்ள ஜிதேஷ் சர்மாவுக்கு போதுமான வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற அணி நிர்வாகம் நினைக்கிறது.

அதேவேளையில் ஒருவேளை இஷான் களமிறங்க வேண்டுமெனில் துவக்க வீரராகவோ அல்லது மூன்றாவது இடத்தில் தான் களமிறங்க வேண்டும். ஆனால் ஏற்கனவே துவக்க வீரருக்கான இடத்தில் யாஷஸ்வி ஜெயஸ்வால் இடது கை வீரராக இருப்பதாலும் மற்றொரு இடத்திற்கு ருதுராஜ் மற்றும் கில் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

- Advertisement -

எனவே இஷான் கிஷனுக்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதேபோன்று ஒருவேளை அவர் மூன்றாவது இடத்தில் இறங்கினால் திலக் வர்மா வெளியேற வேண்டியிருக்கும். அப்படி திலக் வர்மா வெளியேற்றப்பட்டால் அது சரியாக இருக்காது எனவே அந்த தவறையும் இந்திய அணி செய்யாது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2023 உ.கோ தோல்வியால் யாருமே சாப்பிடல.. அவர் வந்து ஆறுதல் சொன்ன அப்றம் தான்.. ஷமி பேட்டி

மேலும் ஒருவேளை இஷான் கிஷன் விளையாட வேண்டுமெனில் பின்வரிசையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட முடியும். ஆனால் தற்போதைக்கு பினிஷர் ரோலில் ஜிதேஷ் சர்மா களம்பிறங்கி ஆடி வருவதால் அவருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக இஷான் கிஷன் அணியில் இடம் பெற முடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement