33 வது ஐபி்எல் போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி நேற்று மோதின. முதலில் பேட்டி செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் டூபிலிஸி கூட்டணி சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் 15 பந்துகளில் 27 ரன்களை குவித்து டூபிலிஸி அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ரெய்னாவும் நன்றாக விளையாடி 36 ரன்களை குவித்தார்.
மேலும் அதன் பின்னர் களமிறங்கிய அணைத்து வீரார்களும் நன்றாக தான் விளையாடினர். ஆனால் ஜடேஜா மட்டும் ஏதோ ஒரு ஒரு நாள் தொடரை ஆடுவது போல விளையாடி அணியின் வேகத்தை குறைத்தார் இதனால் அணியின் எண்ணிக்கை 200 தொடும் என்று எதிர்பார்த்த நிலையில் 177 ரன்கள் மட்டுமே பெற்றது சென்னை அணி.
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சுகளை தும்சம் செய்தனர்.அந்த அணியின் துருப்பு ஆட்டக்காரர்களான கிறிஸ் மற்றும் உத்தப்பாவின் விக்கெட்டுகளை சென்னை ஆணி வீரர்கள் விரைவில் எடுத்தாலும் பின்னர் மோசமான பந்துவீச்சுகளை வீசினார்கள்.மேலும் இந்த போட்டியில் சென்னை அணியின் பீல்டிங்கும் மிக மோசமாக இருந்தது. முக்கியமான கட்டத்தில் ஜடேஜா இரண்டு கேட்ச்களையும் தவறவிட்டார்.
மேலும் இந்த போட்டியில் ஹர்பஜன் மட்டும் தான் 3 ஓவருக்கு 6.6 ரன்கள் என்ற வீதம் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு 10 முதல் 12 ரன்களை வாரி இறைத்தனர். இதுபற்றி பேசிய தோனி “இந்த போட்டியில் எங்கள் அணி மோசமாக விளையாடியது,அதிலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் மோசமாக பந்து வீசினர். பந்துவீச்சாளர்களுடன் தங்களின் வலிமை என்ன என்பதை தெறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பந்துவீச்சின் வேகத்தை தக்கவைக்க வேண்டும். எதிரணி பேட்ஸ்மேன்களின் பலம் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் அது அழுத்தத்தைதான் கொடுக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.