ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணத்தில் சமநிலை வகிக்கின்றனர்.
சாதனைக்கு காத்திருக்கும் நிதீஷ் ரெட்டி :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி பிரிஸ்பேனில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி முறையை 41, 38, 42, 42 என 4 இன்னிங்ஸ்களிலுமே கிட்டத்தட்ட 40 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அதிக அளவில் விளையாடாத அவர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தான் அறிமுகமானார். அப்படி அறிமுகமான இந்த இரண்டு போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்படி அறிமுகமான இந்த தொடரிலேயே ஆஸ்திரேலிய மண்ணில் மிகப்பெரிய வரலாற்று சாதனையையும் நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை இந்த டெஸ்ட் தொடரில் ஏழு சிக்ஸர்களை அவர் அடித்துள்ளார். இன்னும் 6 சிக்ஸர்களை அடித்தால் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையில் முதலிடம் பிடிப்பார்.
இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வெளிநாட்டு வீரர்களாக விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கெயில் ஆகியோர் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 12 சிக்ஸர்களை அடித்துள்ள வேளையில் இந்த சாதனையை முறியடிக்க நிதீஷ் ரெட்டிக்கு இன்னும் 6 சிக்ஸர்கள் மட்டுமே தேவை.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்காக விளையாடணும்னு ஆசைப்பட்டு காத்திருந்தேன்.. அதுக்கு காரணம் இவர்தான் – கமலேஷ் நாகர்கோட்டி
ஏற்கனவே இரண்டு போட்டியில் ஏழு சிக்சர் அடித்த அவர் நிச்சயம் இனிவரும் மூன்று போட்டிகளில் இந்த சாதனையை தகர்ப்பார் என்று நம்பலாம். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களாக ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 10 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



