இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 10-ஆம் தேதியான இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இர்பான் பதானுக்கு அடுத்து நிதீஷ் ரெட்டி நிகழ்த்திய சாதனை :
இதன் காரணமாக தற்போது இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் வேளையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் முன்னிலை வகிக்கும் என்பதினால் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி ஆரம்பித்ததும் இந்திய அணி சார்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பந்துவீச்சில் இன்னிங்சை ஆரம்பித்தனர்.
ஆனாலும் அவர்கள் இருவருக்குமே விக்கெட் கிடைக்கவில்லை. அதன் பின்னர் முகமது சிராஜ் வீசியும் அவருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. பின்னர் போட்டியின் 14-வது ஓவரை வீச ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி வந்தார். அப்படி வந்ததுமே அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பென் டக்கெட்டையும், கடைசி பந்தில் ஜாக் கிராவிலியையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.
அவர் எடுத்த இந்த இரண்டு விக்கெட்டுகள் மூலம் இர்பான் பதானின் 23 ஆண்டுகால சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அதாவது கடந்த 2002-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது முதல் ஓவரை வீசிய இர்ஃபான் பதான் அவர் வீசிய முதல் ஓவரிலே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதையும் படிங்க : டான் பிராட்மேனின் இரட்டை சாதனையை தகர்க்கும் வாய்ப்பில் இருக்கும் சுப்மன் கில் – விவரம் இதோ
அவருக்கு அடுத்து தற்போது 23 ஆண்டுகள் கழித்து நிதீஷ் ரெட்டி போட்டியின் முதல் ஓவரை வீசும்போது 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதுவும் துவக்க வீரர்களை வீழ்த்தி இர்பான் பதானின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



