
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 180 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டான நிதீஷ் ரெட்டி விளையாடிய விதம் பலரதும் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஏனெனில் துவக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தாலும் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து இந்திய அணியின் அனுபவ வீரர்கள் ஆட்டம் இழந்து இந்திய அணி சரிவை சந்தித்தது.
அதன்பிறகு பின் வரிசையில் ஏழாவது வீரராக களமிறங்கிய நிதீஷ் ரெட்டி அவருக்கு பின்னால் இருக்கும் பந்துவீச்சாளர்கள் யூனிட்டை வைத்துக்கொண்டு மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 54 பந்துகளில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர் என 42 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவரது பேட்டிங் எபிலிட்டி மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 9000 ரன்ஸ் 30 செஞ்சூரி அடிச்சும்.. இது கூட தெரியாதா? அனுபவமிக்க விராட் கோலி மீது கவாஸ்கர் அதிருப்தி
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விளையாடும் அவர் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் 3 இன்னிங்சில் சராசரியாக கிட்டத்தட்ட 40 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி பகுதிநேர பந்து வீச்சிலும் சிறப்பாக கை கொடுக்கிறார். எனவே இனி வெளிநாட்டு டெஸ்ட் போட்டி என்றால் நிதீஷ் ரெட்டி இடம் பெறுவதை தவிர்க்க முடியாது என்றே கூறலாம்.