இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள தொடரில் இருந்து நிதீஷ் ரெட்டி திடீர் விலகல் – என்ன காரணம்?

Nitish Reddy
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இன்று தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

எஞ்சியுள்ள தொடரில் இருந்து வெளியேறிய மேலும் ஒரு இந்திய வீரர் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியானது இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். இதன் காரணமாக எதிர்வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து வருவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயமடைந்துள்ள வேளையில் தற்போது மேலும் ஒரு வீரராக ஆல்ரவுண்டராக நிதீஷ்குமார் ரெட்டி காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து நிதீஷ் ரெட்டி வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : இந்த தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இடம் பிடித்திருந்த நிதீஷ்குமார் ரெட்டி சுமாரான செயல்பாட்டையே வெளிப்படுத்தி ஏமாற்றத்தை அளித்திருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் நான்காவது போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஜிம் பயிற்சியில் முழங்காலில் தசைநார் கிழிவு காரணமாக காயமடைந்துள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில் : நிதீஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக வெளியேறியுள்ளது உண்மைதான். அதனால் அவர் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 4 பந்தில் 3 விக்கெட்ஸ்.. வெ.இ அணியை சாய்த்த ஆஸி.. பாண்டிங், வார்னருக்கு பின் ஓவன் 16 வருடம் கழித்து சாதனை

அதுமட்டுமின்றி அவரது காயத்தை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்குமான இந்திய அணியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement