4 பந்தில் 3 விக்கெட்ஸ்.. வெ.இ அணியை சாய்த்த ஆஸி.. பாண்டிங், வார்னருக்கு பின் ஓவன் 16 வருடம் கழித்து சாதனை

Wi vs aus
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஜூலை 21ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஜமைக்காவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரெண்ட்ன் கிங் 18 (12) ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் அதிரடியாக விளையாடினார். மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் சாய் ஹோப்புடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் அரை சதத்தை அடித்து 60 (32) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்த சில ஓவரில் ஹோப்பும் அரை சதத்தை அடித்து 55 (39) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

4 பந்தில் 3 விக்கெட்ஸ்:

அடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மயர் அதிரடி காட்டிய போதிலும் எதிர்ப்புறம் ரோவ்மன் போவல் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அப்போது 19வது ஓவரை வீசிய பென் ட்வார்சுய்ஸ் 3, 4, 6வது பந்துகளில் முறையே ரசல் 8, ரூதர்போர்ட் 0, ஜேசன் ஹோல்டர் 0 ஆகிய 3 அதிரடி பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக்கினார். அந்த வகையில் 4 பந்தில் 3 விக்கெட் எடுத்த அவர் பெரிய திருப்புமுனையை உண்டாக்கினார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் கடைசியில் ஹெட்மயர் 38 (19) ரன்கள் அடித்த போதிலும் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 189/8 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக பென் ட்வார்சுய்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு ஜேக் பிரேசர் 2 (7) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை உண்டாக்கினார். அடுத்து வந்த ஜோடி இங்லிஷ் அதிரடியாக விளையாட முயற்சித்து 18 (8) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

2009க்குப்பின் சாதனை:

மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் 24 (17) ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 11 (10) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் 78/4 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு மிடில் ஆர்டரில் கேமரூன் கிரீனுடன் அறிமுக வீரர் மிட்சேல் ஓவன் ஜோடி சேர்ந்து அசத்தினார். 5வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் அமைத்து ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த அந்த ஜோடியில் க்ரீன் அரை சதத்தை அடித்து 51 (26) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதையும் படிங்க: நாட்டை சுமந்த கிரேட் சச்சினுடன் சேர்த்து எனக்கு இந்த கெளரவம் கிடைச்சதை நம்பவே முடியல.. ஆண்டர்சன் மகிழ்ச்சி

இறுதியில் ஓவன் 50 (27), கூப்பர் கோன்லி 13 (8) ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா 18.5 ஓவரிலேயே 190/7 ரன்களை எடுத்தது. அதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இப்போட்டியின் வாயிலாக ரிக்கி பாண்டிங் (2005), டேவிட் வார்னர் (2009) ஆகியோருக்குப் பின் தனது அறிமுக டி20 போட்டியிலேயே சதத்தை அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஓவன் படைத்தார். மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டன் 2, அல்சாரி ஜோசப் 2, குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

Advertisement