எங்களை திருத்திக்கிட்டு இதை செஞ்சா போதும்.. இந்தியாவால் ஜெய்க்க முடியும்.. அப்பாவின் தியாகம் பற்றியும் நிதிஷ் பேட்டி

Nitish Reddy
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா கடைசி நாளில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து 4வது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 228-9 ரன்கள் எடுத்துள்ளது. மறுபுறம் முதல் இன்னிங்ஸில் போராடி 369 ரன்கள் எடுத்த இந்தியா கடைசி நாளில் 333க்கும் மேற்பட்ட இலக்கை துரத்த வேண்டியுள்ளது.

ஆனால் மெல்போர்ன் மைதானத்தில் எந்த அணியும் 332+ ரன்களை சேசிங் செய்து வென்றதில்லை. அதனால் இந்தியா இந்தப் போட்டியில் வெல்லுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு 2 – 3 நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் இப்போதும் இந்தியாவால் வெல்ல முடியும் என்று நித்திஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா வெல்லும்:

முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் அடித்து போராடினால் வெல்ல முடியும் என்ற இந்திய அணியின் தற்போதைய நிலைக்கு காரணமாக திகழும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது எனக்கும் என்னுடைய தந்தைக்கும் ஸ்பெஷலான சதம். நான் ஒன்றும் இல்லாதவனாக இருந்த போது அவர் தான் என்னை முதல் ஆளாக நம்பினார். அவர் எனக்காக தனது வேலையை விட்டு நிறைய தியாகங்களை செய்தார்”

“அவரைப் போன்ற தந்தை கிடைத்ததற்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். சிராஜ் பந்தை தடுத்ததும் ரசிகர்கள் சத்தமாக கூச்சலிட்டார்கள். என்னுடைய சதத்தை அடித்த போது கூட அவர்கள் அப்படி கூச்சலிடவில்லை. அவர் அந்த 3 பந்துகளை நன்றாக விளையாடினார். அவருக்கும் நான் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் எங்களுடைய பேட்டிங் வரிசை பற்றி இன்னும் விவாதிக்கவில்லை”

- Advertisement -

தன்னம்பிக்கையுடன் நிதிஷ்:

“இந்த பிட்ச்சில் எங்கள் அணியில் அனைவராலும் அசத்த முடியும். முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு நாங்கள் வலுவாக கம்பேக் கொடுப்போம். எனது பேட்டிங்கில் 2 – 3 வருடங்களாக உழைத்து வருகிறேன். ஐபிஎல் தொடருக்குப்பின் அதில் முன்னேற்றம் தேவைப்பட்டது. அதற்காக எக்ஸ்ட்ராவாக பயிற்சி செய்தது தற்போது வேலை செய்கிறது. ஆல் ரவுண்டராக என்னுடைய ஃபிட்னஸ் முக்கியம்”

இதையும் படிங்க: வரலாறு காணாத கூட்டம்.. இந்தியா ஆஸ்திரேலியா “பாக்சிங் டே” போட்டி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

“2வது இன்னிங்ஸில் சதத்துடன் என்னுடைய ஆட்டத்தை துவங்க முடியாது. புதிதாக துவங்க வேண்டும். அணியின் திட்டங்களுக்கு தகுந்தார் போல் நாங்கள் விளையாடுவோம். பிட்ச் எப்படி இருக்கும் என்று பேசி அழுத்தத்தை உருவாக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. முதலில் அவர்களுடைய கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டும். பின்னர் 2 – 3 நல்ல பார்ட்னர்ஷிப்புகளை அமைத்தால் இப்போட்டியில் வெல்வதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும்” என்று கூறினார்.

Advertisement