வரலாறு காணாத கூட்டம்.. இந்தியா ஆஸ்திரேலியா “பாக்சிங் டே” போட்டி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் டிராவுடன் இந்த தொடரானது தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

பாக்சிங் டே போட்டி நிகழ்த்திய சாதனை :

அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியாக துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்த வேளையில் இந்த ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த மெல்போர்ன் “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியானது வரலாறு காணாத சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளதாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

அதன்படி போட்டி நடைபெற்று வரும் மெல்போர்ன் மைதானத்தில் முதல் நான்கு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் அதாவது 2 லட்சத்து 99 ஆயிரத்து 329 பேர் இதுவரை நேரில் கண்டு ரசித்துள்ளதாக ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் இதுவரை இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டிகளிலேயே இதுதான் அதிக பார்வையாளர்கள் நேரில் வந்து கண்டு களித்த போட்டியாக வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : நீங்க அதை செய்யலன்னா வைரம் கிடைச்சுருக்காது.. காலில் விழுந்த நிதிஷ் ரெட்டி அப்பாவை வாழ்த்திய கவாஸ்கர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டி என்பதனால் இந்திய ரசிகர்களும் இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் ஆர்வமாக பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement