அரைசதம் கடந்த பின்னர் நிதிஷ் ராணா செய்த இந்த செலிப்ரேஷன் எங்கிருந்து வந்தது தெரியுமா ? – விவரம் இதோ

Rana
- Advertisement -

நேற்று நடந்த முடிந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 187 ரன்கள் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய ராணா 56 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். 4 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் என நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்.

Rana 1

- Advertisement -

இந்த போட்டியில் அரைசதம் கடந்த அவர் தனது செலிப்ரேஷனை வித்தியாசமான முறையில் செய்தார். அவரின் இந்த செலிப்ரேஷனுக்கான அர்த்தம் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அவரது இந்த கொண்டாட்டம் யாரிடம் இருந்து வந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனது அரைசதத்தை அடித்த ராணா ஜெர்மனியை சேர்ந்த ஃபுட்பால் வீரரான மேசுட் ஓசில் கொண்டாடவதைப் போலவே கொண்டாடினார்.

இதற்கு முன்னர் ராணா பல போட்டிகளில் இவ்வாறு கொண்டாடியுள்ளார். ஆனால் அதையெல்லாம் யாரும் சரியாக கவனிக்காத பட்சத்தில், நேற்றைய போட்டியில் எல்லோரும் அதை கவனித்து அதைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். நித்திஷ் ராணாவை தொடர்ந்து டிரிப்பாதி 29 பந்துகளில் 53 அடித்து கொல்கத்தா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி கடைசி ஓவர்களில் ரஸ்ஸல் மற்றும் மோர்கனை பறிகொடுத்து தடுமாறியது. அப்போது கிளம்புறீங்க தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்து கொல்கத்தா அணியின் ஸ்கோரை 180க்கு மேல் உயர்த்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 187 ரன்கள் அடித்து தனது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது

Mesut-Ozil

அதன் பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த இரு அணிகளுமே இந்த தொடரை ஆரம்பம் முதலே வெற்றி பெறும் முனைப்போடு விளையாடி வருகின்றனர்.

kkr

கொல்கத்தா அணி கடைசியாக 2014ம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரை கைப்பற்றியது.அதைப்போலவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016 ஆம் ஆண்டு தனது முதல் கோப்பையை கைப்பற்றியது. எனவே நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் கோப்பையை கைப்பற்ற இவ்விரு அணிகளும் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற போராடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Advertisement