பாண்டிங் கொடுத்த அட்வைஸ். சச்சினே வியந்த வீரர். அதிரடியான இளம்வீரரை உருவாக்கிய கொல்கத்தா அணி – விவரம் இதோ

Ponting
- Advertisement -

ஐபிஎல் தொடரில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் இடதுகை பேட்ஸ்மேன் நிதிஷ் ரானா. இவர் 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தனது பேட்டிங்கிற்கும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு எப்படி உதவினார்கள் என்பது குறித்து தற்போது பேசியுள்ளார் நிதிஷ் ரானா.

NitishRana

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டேன். எனது திறமையை வழக்கம்போல வலை பயிற்சியிலும் ஆடுகளத்தில் காண்பித்து வந்தேன். இதனையெல்லாம் சச்சின் டெண்டுல்கர் கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறார். எனது நண்பர் ஒருவர், சச்சின் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மேலாளர் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறார் .

என்னைப் பார்த்து யார் இந்த பையன்? என்று சச்சின் கேட்டுள்ளதாக என நண்பர் என்னிடம் கூறினார். அப்போது எனக்கு அந்த உணர்வு நன்றாக இருந்தது. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு உற்சாகம் பிறந்தது.

Rana

அதேபோல் 2016ஆம் ஆண்டு குஜராத்தில் அணிக்கு எதிராக விளையாட தயாரானேன். அப்போது நான் பதட்டமாக இருந்தேன். என்னிடம் வந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தடுத்து மட்டும் விளையாடிக் கொண்டு இருக்காதே, உன்னிடம் அடித்து ஆடும் திறமை இருக்கிறது. பந்தை அடித்து ஆடு என்று எனக்கு அறிவுரை கூறினார். இதனை அப்படியே செயல்படுத்தினேன்.

- Advertisement -

இந்த போட்டியில் 36 பந்துகளில் 70 ரன்கள் குவித்தேன். இந்த குறிப்பிட்ட போட்டி எனது வாழ்க்கையையே மாற்றியது. என்னிடமிருந்த அனைத்தையும் மாற்றியது. அந்த போட்டிக்கு பின்னர் எனது கிரிக்கெட் திறமை பற்றி எனக்கு சந்தேகம் வரவே இல்லை. இப்படி தான் எனக்கு சர்வதேச கிரிக்கெட்டின் நம்பிக்கை பிறந்தது. இந்த இருவரும்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றினார்கள் என்று கூறியுள்ளார் இது நிதிஷ் ரானா.

Nitish-Rana

இடதுகை அதிரடி ஆட்டக்காரரான நிதிஷ் ராணா தற்போது கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் இந்திய அணியின் வாய்ப்புக்காக எதிர்பார்த்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement