KKR vs MI : வெங்கடேஷ் ஐயரை நெனச்சா தான் மனசு கஷ்டமா இருக்கு – தோல்விக்கு பின் நிதீஷ் ராணா பேட்டி

Nithish-Rana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

MI vs KKR

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 104 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்டியது.

அதன் காரணமாக மும்பை அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக இஷான் கிஷன் 25 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா கூறுகையில் :

Venkatesh Iyer

நாங்கள் இந்த போட்டியில் 15 ரன்கள் முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். எதிரணியின் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா சிறப்பாக பந்துவீசி எங்களது அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை காட்டிலும் வெங்கடேஷ் ஐயரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் அவர் அற்புதமாக விளையாடி இந்த போட்டியில் சதம் அடித்தார்.

- Advertisement -

கொல்கத்தா அணிக்காக சதம் அடிக்கும் இரண்டாவது வீரர் இவர் தான் என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவர் சதம் அடித்தும் இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம். இதேபோன்று இனிவரும் போட்டிகளில் எங்கள் அணியில் உள்ள மற்ற வீரர்கள் நிச்சயம் சதம் அடிப்பார்கள். இந்த டார்கெட்டை வைத்து எங்களது பந்துவீச்சாளர்கள் எதிரணியை நிறுத்தி இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : MI vs KKR : ஃபார்முக்கு திரும்பி கொல்கத்தாவை முரட்டு அடி அடித்த இஷான், சூர்யகுமார் – பழைய பாட்ஷாவாக மும்பை மாஸ் வெற்றி

ஆனால் இந்த போட்டியில் அது முடியாமல் போனது. பவர்பிளே ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்திருக்க வேண்டும். எங்களது அணியின் பந்துவீச்சு கூட்டணியில் இன்னும் நிறைய நல்ல செயல்பாட்டை எதிர்பார்க்கிறோம். நிச்சயம் இனிவரும் போட்டிகளில் இதுகுறித்து நாங்கள் அமர்ந்து பேசி நல்ல நிலையை எட்டுவோம் என நிதீஷ் ராணா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement