MI vs KKR : ஃபார்முக்கு திரும்பி கொல்கத்தாவை முரட்டு அடி அடித்த இஷான், சூர்யகுமார் – பழைய பாட்ஷாவாக மும்பை மாஸ் வெற்றி

MI vs KKR
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 22வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பையின் கேப்டனாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஆரம்பத்திலேயே தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் டக் அவுட்டானார்.

அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக செயல்பட்டும் எதிர்ப்புறம் ரஹ்மதுல்லா குர்பாஸ் 8 (12) நித்தீஷ் ராணா 5 (10) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 73/3 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதமடித்த வெங்கடேஷ் ஐயருடன் பெயருக்காக 4வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷார்துல் தாகூர் 13 (11) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மும்பை மாஸ் வெற்றி:
ஆனாலும் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று மும்பை பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரி 9 சிக்ஸருடன் தனது முதல் ஐபிஎல் சதமடித்து 104 (51) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். குறிப்பாக 2008இல் ப்ரெண்டன் மெக்கல்லத்துக்கு பின் 15 வருடங்கள் கழித்து கொல்கத்தாவுக்கு சதமடித்த 2வது வீரராக சாதனை படைத்த அவருக்குப்பின் ரிங்கு சிங் 18 (18) ரன்களில் நடையை கட்டினாலும் கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21* (11) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் கொல்கத்தா 185/6 ரன்கள் சேர்த்தது.

மும்பை சார்பில் அதிகபட்சமாக ரித்திக் சாக்கின் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 186 ரன்களை துரத்திய மும்பைக்கு இம்பேக்ட் வீரராக வந்த ரோகித் சர்மா – இஷான் கிசான் ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் சரவெடியான பேட்டிங் செய்து 4.5 ஓவரிலேயே 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து மிரட்டல் தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக மாயாஜால ஸ்பின்னர் சுனில் நரேன் வீசிய ஓவரில் 22 ரன்களை இஷான் கிசான் அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

அந்தளவுக்கு அதிரடியாக செயல்பட்ட அந்த ஜோடியில் ரோகித் சர்மா 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20 (13) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே 5 பவுண்டரி 5 சிக்சர்களை தெறிக்க விட்டு 58 (25) ரன்களை 232.00 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய இஷான் கிஷான் ஃபார்முக்கு திரும்பி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார்.

ஏனெனில் அடுத்ததாக சூரியகுமாருடன் இணைந்த இளம் வீரர் திலக் வர்மா நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 30 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் அடுத்தடுத்த டக் அவுட்டுக்கு பின் நல்ல இன்னிங்ஸ் விளையாடி ஃபார்முக்கு திரும்பிய சூரியகுமார் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 43 (25) ரன்களில் அவுட்டானாலும் கடைசியில் டிம் டேவிட் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24* (13) ரன்கள் எடுத்ததால் 17.4 ஓவரிலேயே 186/5 ரன்கள் எடுத்த மும்பை நீண்ட நாட்கள் கழித்து பழைய பாட்ஷாவை போல முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சூயஸ் சர்மா 2 விக்கெட்கள் எடுத்தார். இப்போட்டி நடைபெற்ற வான்கடே மைதானத்தில் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் ஐயர் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேன்களும் 25 ரன்கள் கூட தொடவில்லை.

இதையும் படிங்க:எனக்கு இந்த சீக்கி ஷாட்லாம் செட் ஆகாது. நான் அடிச்சா சிக்ஸ் தான். ஏன் தெரியுமா? – கெத்தாக பேசிய ஷாருக்கான்

அதனால் அந்த அணி 200 ரன்கள் எடுக்கத் தவறியது சற்று பின்னடைவை ஏற்படுத்தினாலும் பந்து வீச்சில் சுனில் நரேன் உள்ளிட்ட பெரும்பாலான பவுலர்கள் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார். அப்படி பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட அந்த அணியை ஆரம்பத்திலேயே இஷான் கிசான் அடித்து நொறுக்கிய உதவியுடன் இதர பேட்ஸ்மேன்களும் கணிசமான ரன்களை அதிரடியாக எடுத்ததால் மும்பை 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement