விரைவில் மாற்றம் நிகழும். இந்திய அணியில் இடம்பெறாத விரக்தியில் – வருத்தத்தை பதிவிட்ட இளம்வீரர்

ind
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது வருகிற 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பிசிசிஐ தேர்வு செய்து அறிவித்தது.

IND

அந்த அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களுக்கு இந்த தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வானாலும் சில குறிப்பிட்ட வீரர்களை இந்த தேர்வு வருத்தமடைய செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நிதீஷ் ராணா 14 போட்டிகளில் விளையாடி 361 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் அவர் இந்திய அணியில் தனது பெயர் சேர்க்கப்படாததால் மிகவும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். மேலும் அவர் தனது வருத்தத்தை அவரது சமூக வலைதளம் மூலமாக பதிவிட்டு தனது குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : விரைவில் மாற்றம் நிகழும் என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

rana 1

28 வயதான நிதீஸ் ராணா கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்ற ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். அப்போது ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்த அவர் ஆடிய மூன்று ஆட்டங்களிலுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக அப்போதே அவர் தனது வாய்ப்பை வீணடித்து விட்டார் என்று பேசப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடிய வேளையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. அதேவேளையில் இலங்கை தொடருக்கு பின்னர் அவர் வெளியிட்டிருந்த ஒரு பதிவில் : சமூக ஊடகங்கள் வெற்றியை மட்டுமல்ல தோல்விகளையும் வெளியிடுகின்றன. நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் கடந்த மூன்று போட்டிகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

இதையும் படிங்க : விடாமுயற்சியின் வெற்றி ! ஐபிஎல் தொடரில் அசத்தி இந்திய அணிக்குள் கம் பேக் கொடுத்த 5 நட்சத்திர சீனியர் வீரர்கள்

எனது கையில் பேட்டை பிடித்த காலத்தில் இருந்தே அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பையே நான் மிகவும் நம்புவேன். எனவே நிச்சயம் மீண்டும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி எனக்கும் எனது அணிக்கும் வெற்றியை தேடித் தருவேன் என்று அவர் பதிவிட்ட அந்த கருத்து தற்போது இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement