விடாமுயற்சியின் வெற்றி ! ஐபிஎல் தொடரில் அசத்தி இந்திய அணிக்குள் கம் பேக் கொடுத்த 5 நட்சத்திர சீனியர் வீரர்கள்

Kulcha Kuldeep yadav Chahal
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏற்கனவே இந்தியாவிற்காக விளையாடி தங்களது நிலையான இடத்தை இழந்த நட்சத்திர வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்த விட வேண்டும் என்று லட்சியத்தோடு விளையாடினார்கள். அதற்கேற்றார்போல் ஐபிஎல் தொடர் முடிந்ததும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது என்பதை உணர்ந்த அவர்கள் அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளை குவித்து முன்னாள் வீரர்களின் ஆதரவையும் பெற்றனர்.

IPL

அந்த நிலைமையில் தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஐபிஎல் தொடரில் அசத்திய 5 நட்சத்திர வீரர்கள் மீண்டும் வலுவான இடத்தைப் பிடித்து விடா முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. தினேஷ் கார்த்திக்: தமிழகத்தின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது இளம் வயதில் 2004இல் இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் படிப்படியாக விளையாடினார். ஆனால் அந்த சமயத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக தோனி உருவெடுத்ததால் வாழ்நாளில் பெரும்பாலான தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறாத அவர் கடைசியாக 2019இல் இந்தியாவிற்காக விளையாடினார். அதன்பின் இந்திய தேர்வு குழுவினர் அவரை கண்டுக்காமல் இருந்ததாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழகத்திற்காக சிறப்பாக விளையாடி கேப்டனாக சையது முஷ்டாக் அலி கோப்பையை 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தமிழகத்திற்காக வென்று காட்டினார்.

Dinesh Karthi 66

ஆனாலும் வாய்ப்பு பெறாத அவர் கடந்த வருடம் வர்ணனையாளராக செயல்பட்டதால் இனிமேல் இந்திய அணிக்கு விளையாடவே மாட்டார் என்று கருதப்பட்டது. இருப்பினும் பெங்களூருவுக்காக கடைசி நேரத்தில் களமிறங்கி எதிரணி பவுலர்களை பந்தாடி அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பையில் விளையாடிய தீருவேன் என்ற லட்சியத்துடன் சொல்லி அடித்த கில்லியாக மிகச் சிறந்த பினிஷராக தன்னை அடையாளப் படுத்தினார். பெங்களூரு பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் 14 போட்டிகளில் 9 முறை அவுட்டாகாமல் 287* ரன்களை குவித்ததால் சுனில் கவாஸ்கர் உட்பட பல முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆதரவால் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

2. குல்தீப் யாதவ்: 2017 – 2018 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் விளையாடி முதன்மை சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்த குல்திப் யாதவ் 2019இல் சிறப்பாக பந்துவீச தடுமாறினார். அதனால் இந்திய அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட அவரை கொல்கத்தா அணி நிர்வாகமும் கழற்றி விட்டது.

Kuldeep Yadhav vs KKR 2.jpeg

அதற்கிடையே காயமடைந்து குணமடைந்த அவர் மனம் தளராமல் 2 கோடி என்ற நல்ல தொகைக்கு தன்னை நம்பி வாங்கிய டெல்லி அணிக்கு இம்முறை பங்கேற்ற 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்து 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று மீண்டும் அதே பழைய பன்னீர்செல்வமாக முழு பார்முக்கு திரும்பியுள்ளார். இதனால் சமீபத்திய இலங்கை தொடரில் நிலையில்லாத வாய்ப்பு பெற்ற அவர் தற்போது உறுதியான இடத்தை பிடித்து டி20 உலக கோப்பை வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

3. யுஸ்வேந்திர சாஹல்: அதே காலகட்டத்தில் குல்தீப் யாதவ் உடன் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஜோடியாக வலம் வந்த சாஹல் கடந்த 2021இல் சிறப்பாக பந்து வீச தடுமாறியதால் அந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் வாய்ப்பை இழந்தார். அதே காரணத்துக்காக 2013 முதல் சிறப்பாக விளையாடி வந்த பெங்களூர் அணி நிர்வாகமும் அவரை கழட்டி விட்டது.

Chahal RR

ஆனாலும் ராஜஸ்தானுக்காக இந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக பந்துவீசிய அவர் ஹாட்ரிக் உட்பட இதுவரை பங்கேற்ற 14 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட் எடுத்த பவுலராக ஊதா தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். சமீபத்தைய இலங்கை தொடரில் நிலையில்லாத வாய்ப்பை பெற்ற இவரும் வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பையில் இப்போதே ஒரு நிலையான இடத்தை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

4. ஹர்டிக் பாண்டியா: கபில் தேவுக்கு பின் இந்தியாவின் சிறந்த ஆல்-ரவுண்டராக கருதப்பட்ட ஹர்திக் பாண்டியா கடந்த வருடம் காயத்தால் பந்து வீசாமல் இருந்த நிலையில் 2021 டி20 உலக கோப்பையில் பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டது இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்தது.

Pandya

அதனால் பந்து வீசும் வரை வாய்ப்பில்லை என்று வெளியேற்றிய இந்திய தேர்வு குழுவுக்கு இந்த ஐபிஎல் தொடரில் தேவையான அளவு பந்துவீசி காண்பித்த அவர் பேட்டிங்கிலும் அதுவும் 3-வது இடத்தில் களமிறங்கி மிகச் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன் அனுபவமில்லாத கேப்டன்சிப் பொறுப்பில் முதல் வருடத்திலேயே குஜராத்தை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற காரணத்தால் வேறு வழியின்றி தேர்வு குழு மீண்டும் அவரை தேர்வு செய்துள்ளது.

5. புவனேஸ்வர் குமார்: ஒரு காலத்தில் துள்ளியத்திற்கு பெயர்போன புவனேஸ்வர் குமார் கடந்த 2018இல் ஏற்பட்ட காயத்திற்கு பின் சுமாரான பவுலராக மாறினார். குறிப்பாக கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் 1 விக்கெட் கூட எடுக்காத ரன்களை வாரி வழங்கினார். அதனால் கடுப்பான இந்திய தேர்வு குழு சொந்த மண்ணில் சமீபத்தைய வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் கடைசி வாய்ப்பை அளித்தது.

Bhuvi

அதில் ஓரளவு சுமாராக செயல்பட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் 14 போட்டிகளில் 12 விக்கெட்களை 7.34 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து மீண்டும் பார்முக்கு திரும்பி இந்திய டி20 அணியில் ஒரு நிலையான இடத்தை உறுதி செய்துள்ளார்.

Advertisement