எனக்கு பேட்டிங் முக்கியமில்லை என்று மைதானத்தில் இருந்து தலைதெறிக்க ஓடிய கிரிக்கெட் வீரர்

Nigeria
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்ள தற்போது கடைநிலை அணிகளுக்கு தகுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அப்படி 14 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் மும்முரமாக நடைபெறும் வேளையில் தற்போது அதில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.

அதன்படி ஜிம்பாப்வே அணி ஐசிசியால் தடை செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு பதிலாக நைஜீரியா அணி டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் பங்கேற்க தகுதி பெற்றது. அதன்படி நைஜீரியா அணியும் அதனை எதிர்த்து கனடா அணியும் மோதின. அதில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நைஜீரியா பேட்ஸ்மேன் திடீரென பேட்டிங் வேண்டாம் என்று பேட்டை கீழே போட்டு விட்டு மைதானத்தில் வெளியே சென்றார்.

- Advertisement -

அவர் எதற்காக சென்றார் என்று அம்பயர்கள் சென்று பார்த்த போது அவருக்கு உடனடியாக இயற்கை அழைப்பு வந்ததாகவும் மேலும் அவர் ஓய்வு அறைக்கு சென்று இயற்கைஅழைப்பை முடித்துவிட்டு மீண்டும் ஓடி வந்து பேட்டிங் செய்ய வந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்வை கண்ட சக அணி வீரர்களும் சரி எதிரணி வீரர்கள் சரி மைதானத்தில் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினார்கல். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement