இலங்கையில் நடைபெற்று வரும் நடாஸ் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் போட்டியின் போது தமிழில் உரையாடியது தற்போது வைரலாகி வருகின்றது.
நேற்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்த போது, வாஷிங்டன் சுந்தர் பந்து வீசினார். அப்போது, பீல்டிங்கில் நின்றிருந்த விஜய் சங்கர் ‘டேய் right-ல போடாதடா’ என சுந்தரிடம் கூறினார்.
அதற்கு கீப்பிங் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், ‘அவன் சொன்னா கேட்க மாட்டேங்குறான்டா’ என்று பதிலளித்தார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் இடதுபுறத்தில் பந்து வீசினார்.
இவர்களின், இந்த உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் வெறுமனே குழம்பிப் போய் நின்று கொண்டிருந்தார்.
எதிரணியினருக்கும் இவர்கள் பேசியது புரியாமல் குழம்பினர்.