IND vs WI : நாங்க மேட்சை தோத்ததே அந்த இடத்துல தான். தோல்விக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த – நிக்கோலஸ் பூரான்

Nicolas-Pooran
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற இந்திய அணியானது நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது.

Siraj

- Advertisement -

அதன்படி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் முதலாவதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.4 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் இறுதிக்கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியின் போது பெரிய இலக்கினை சேசிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிய இடைவெளியில் போட்டியை தோற்று இருந்தது. அதனை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியானது இறுதிவரை போராடி கடைசியில் தோல்வி அடைந்தது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கும். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டிஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறுகையில் :

Axar Patel

நிச்சயமாக இந்த போட்டியில் தோற்றது வருத்தமாக தான் உள்ளது. கடைசி இரண்டு ஓவர்களில் நாங்கள் மிகவும் பதட்டம் அடைந்து விட்டோம். இந்திய அணி வீரர்கள் கடைசி 6 ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அந்த ஆறு ஓவர்களில் தான் நாங்கள் போட்டியை அவர்களிடம் தோற்றோம். ஸ்பின்னர்கள் வீசும் போது எளிதாக அடிக்க முடிகிறது என்பதனால் நாங்கள் எங்களது திட்டத்தை மாற்றி மாற்றி செயல்படுத்தினோம். ஆனாலும் இறுதியில் அக்சர் பட்டேலின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போனது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

அக்சர் படேல் இந்த போட்டியில் அருமையாக பேட்டிங் செய்தார். அவரது அந்த ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். எங்கள் அணியின் துவக்க வீரரான சாய் ஹோப் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது நூறாவது போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். எங்கள் அணிக்காக அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க : IND vs WI : அவங்க 311 ரன் அடிக்கும் போதே எங்களுக்கு தெரியும். வெற்றி குறித்து – ஷிகார் தவான் பேசியது என்ன?

அதே போன்று பேட்டிங்கில் நாங்கள் அனைவருமே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். அதேபோன்று பந்து வீச்சிலும் இறுதிவரை போராடினோம். ஆனாலும் இறுதியில் தோற்றது வருத்தம் தான். நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என நிக்கோலஸ் பூரான் வருத்தத்தை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement