இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துவிட்டது.
லக்னோ அணிக்கு புதிய கேப்டன் :
இதன் காரணமாக அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது. இன்னும் இந்த நிபந்தனைக்கு ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை தயார்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் கடந்த மூன்று சீசங்களாகவே கே.எல் ராகுல் தலைமையில் விளையாடி வந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இம்முறை பெரிய மாற்றம் ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறது. ஏற்கனவே அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுல் ஏற்கனவே லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது.
இதன் காரணமாக லக்னோ அணி புதிதாக யாரை கேப்டனாக நியமிக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் லக்னோ அணி சார்பாக நிக்கோலஸ் பூரான், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் மட்டுமே தக்கவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அவர்கள் மற்ற அனைவரையும் விடுவித்து கையில் நிறைய பணத்தை வைத்துக்கொண்டு ஏலத்திற்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஏலத்தில் சிறந்த ஒரு கேப்டனை வாங்க முடியாமல் போனால் லக்னோ அணி யாரை கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 3க்கு 3.. ஓமனை வீழ்த்திய இந்தியா வெற்றி.. செமி ஃபைனலில் மோதுவது யார்?
அந்த வகையில் லக்னோ அணியில் முதல் வீரராக தக்க வைக்கப்படும் நிக்கோலஸ் பூரான் தான் அந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கூட கே.எல் ராகுல் வெளியில் அமர்ந்திருந்த போட்டிகளில் எல்லாம் பூரான் தான் கேப்டனாக செயல்பட்டார். எனவே அதிரடி வீரரான அவரின் தலைமையில் லக்னோ அணி அமைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



