பால் டாம்பரிங் செய்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மே.இ நட்சத்திர வீரர் – ஐ.சி.சி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை

Wi-3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டித் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் அந்த அணியின் முன்னணி அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Wi-2

- Advertisement -

அதன்படி 24 வயதான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் 50 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது செய்த செயல் ஒன்று தற்போது ஐசிசி விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தொடரில் விக்கெட் கீப்பிங் செய்யாதவ நிக்கோலஸ் பூரான் பீல்டிங் செய்துவந்தார். அவர் பீல்டிங் செய்தபோது பந்தை துடைப்பது போன்று தனது நகத்தால் கீறி சேதப்படுத்தி உள்ளார் இது ஐசிசி விதிமுறைகளுக்கு மீறப்பட்ட பல் டாம்பெரிங் செயல் ஆகும். இதனை நடுவர்கள் ஐசிசி இடம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் அவருக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே நிக்கோலஸ் பூரான் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement