ஐ.பி.எல் வரலாற்றில் அதிரடி சாதனையை படைத்த பூரான். சூப்பர் ரெக்கார்ட் தான் – விவரம் இதோ

Pooran

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

kxipvssrh

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் சார்பாக அதிரடியாக விளையாடிய பூரான் ஒரு மிகப்பெரிய சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

pooran 2

நேற்றைய போட்டியில் அடுத்தடுத்து ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் மிடில் ஆர்டரில் வந்த நிக்கலஸ் பூரன் தனி ஒருவராக போராடி ரன்களை குவித்து வந்தார். முன்னால் வந்த அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து போதும் ஒருபுறம் அதிரடியாக ஆடி வந்த நிக்கலஸ் பூரன் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக வெளுத்து வாங்கினார். மேலும் சமத் வீசிய 9 ஆவது ஓவரில் 4 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

- Advertisement -

pooran 1

இவர் அடித்த இந்த அரைசதத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ராகுல் 14 பந்துகளில் அரைசதத்தை கடந்ததே அதிவேக அரைசதமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் நேற்றைய போட்டியில் 17 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம் 2-வது அதிவேக அரைசதத்தை பூரான் ஐபிஎல் தொடரில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.