ராகுலுடன் சேர்த்து பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னணி வீரர் – விவரம் இதோ

Gayle-1

ஐபிஎல் தொடரின் 29-வது போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராகுல் அப்பன்டிக்ஸ் பிரச்சனை காரணமாக அணியில் இருந்து வெளியேறி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் புதிய கேப்டனான அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

dcvspbks

பஞ்சாப் அணியின் கேப்டனான ராகுல் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று மட்டுமின்றி இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக 331 ரன்கள் உடன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை காரணமாக அணியில் இருந்து அவர் வெளியேறியதால் அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் அகர்வால் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாட முடியாத சூழ்நிலையில் மற்றொரு முக்கிய வீரரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த வீரர் வேறுயாருமில்லை நிக்கலஸ் பூரன் தான் இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஆட்டம் இழந்ததால் அவரை இன்றைய போட்டியில் இருந்து நீக்கியுள்ளனர்.

அவருக்கு பதிலாக உலகின் நம்பர் 1 வீரரான டேவிட் மலானை அணிக்குள் இணைத்துள்ளனர். தொடர்ச்சியாக ரன் எடுக்காமல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூரானுக்கு ஒரு ஓய்வை கொடுத்து அவருக்கு பதிலாக இந்த தொடரில் இதுவரை களமிறங்காத டேவிட் மலானுக்கு அறிமுக வாய்ப்பாக பஞ்சாப் அணி இன்று விளையாட வைத்துள்ளது. இதன் காரணமாக ராகுல் உடன் சேர்ந்து நட்சத்திர வீரரான பூரானுக்கும் அணியில் இடம் கிடைக்காமல் போனது.

- Advertisement -

Pooran

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இன்னும் சற்று முன்னேறலாம் என்ற நோக்கத்துடன் பஞ்சாப் அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேற டெல்லி அணி கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியை சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.