நேற்றைய போட்டியிலும் டக் அவுட் ஆகி ஐ.பி.எல் தொடரில் மோசமான சாதனைப் படைத்த – நிக்கோலஸ் பூரான்

Pooran

நடப்பு ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

gayle

இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிக்கோலஸ் பூரன் இந்த தொடரில் மீண்டும் ஒரு முறை டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர்களில் மிக மோசமான சாதனை படைத்த வீரர்கள் பட்டியலிலும் நிக்கோலஸ் பூரன் இடம் பெற்றிருக்கிறார்.
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பலவீனமாக அமைந்திருப்பது, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையே. அந்த பிரச்சனையை நிக்கோலஸ் பூரன் சரி செய்வார் என்று நம்பி அவருக்கு தொடர்ந்து விளையாடும் அணியில் வாய்ப்பு வழங்கி வருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஆனால் அவர் பஞ்சாப் அணியின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக கடந்த ஆறு போட்டிகளில் 3 முறை டக் அவுட்டாகியிருந்தார். அதேபோல் நேற்றைய போட்டியிலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய பூரான் 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் நான்கு முறை டக் அவுட்டாகிய ஐந்தாவது வீரர் என்ற மிக மோசமான சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

pooran 1

இதற்கு முன்னராக ஹெர்ஷல் கிப்ஸ் 2009 தொடரிலும், மன்னாஸ் 2011 தொடரிலும், மனிஷ் பாண்டே 2012 தொடரிலும், ஷிகர் தவான் 2020 தொடரிலும் நான்கு முறை டக் அவுட்டாகியிருந்தனர். இப்போது ஐந்தாவது வீரராக நிக்கோலஸ் பூரான் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இன்னும் ஒரு ஆட்டத்தில் அவர் டக் அவுட்டானாலும் ஒரு ஐபிஎல் தொடரில் 5 முறை டக் அவுட்டான முதல் வீரர் என்ற மிக மோசமான சாதனையையும் அவர் படைப்பார்.

- Advertisement -

pooran 2

இதுவரை பஞ்சாப் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் நிக்கோலஸ் பூரன் களமிறங்கியிருக்கிறார். அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே ரன் எடுத்திருந்த நிகோலஸ் பூரான், இந்த போட்டியில் தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்த்திருந்த பஞ்சாப் அணியின் ரசிகர்கள்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இத் தொடரில் ஆறு போட்டிகளில் களம் கண்டிருக்கும் பூரான், மொத்தம் 28 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.