மேக்ஸ்வெல்லை தொடர்ந்து மனநல பிரச்சனையால் வெளியேறிய மற்றொரு ஆஸி வீரர் – விவரம் இதோ

Maxwell

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நிக் மேட்டின்சன் இடம்பெற்றிருந்தார்.

Maddinson 1

27 வயதான நிக் மேட்டின்சன் ஆஸ்திரேலியா அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 6 20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் அவர் திடீரென்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்து தான் மன அழுத்தம் காரணமாக விலகுவதாகவும் தனக்கு தற்காலிக ஓய்வு வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டு விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக அணியில் கேமரூன் பான்கிராப்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கூறுகையில் : எங்களுக்கு வீரர்களின் உடல் நலனே முக்கியம் எனவே நிக் மேட்டின்சனுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நாங்க நாங்கள் வழங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

Maddinson

ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் மன அழுத்தம் காரணமாக கடந்த மாத இறுதியில் அணியிலிருந்து விலக தற்போது நிக் மேட்டின்சன் விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -