சென்னை அணியில் இணைந்த இளம் மிரட்டலான கில்லாடி…CSK கூடுதல் பலமா ? – யார் தெரியுமா ?

nigidi
- Advertisement -

கடந்த திங்கட்கிழமை புனேவில் நடந்த போட்டியில் அபாரமாக பந்து வீசி சென்னை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தவர் சென்னை அணியின் புதிய பந்துவீச்சாளராக களமிறங்கிய நிகிடி. அந்த போட்டியில் 4 ஒவர்களை வீசி 26 ரன்களை கொடுத்த நிகிடி 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். மேலும் அந்த போட்டியின் முடிவில் தோனி கூறியது போது கூட அணியின் வேக பந்து வீச்சாளராக நிகிடி தென்னாப்ரிக்கா அணியிலிருந்தே நன்றாக ஆடிவருகிறார்.

nigidi

- Advertisement -

அவர் உயரமாக இருப்பதால் அவர் பௌன்செர் பந்துகளை போட வசதியாக இருக்கிறது என்று அவரின் திறமையை பாராட்டினார். இதனிடையே இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபில்-லின் 33 வது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி பல பரீட்சை செய்யவுள்ளது. ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய முதல் போட்டயில் சென்னை அணி மகத்தான வெற்றியை பெற்றது .

மேலும் இன்று நடக்க உள்ள இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று சென்னை அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளது. மேலும் கடந்த இருபோட்டிககளிலும் களமிறங்காத சாம் பில்லிங்ஸ் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை அணியின் பேட்டிங் பொறுத்த வரை பிரச்சனை எதுவும் இல்லை ஆனால் அனுபவமிக்க பந்து வீச்சாளர்கள் இருந்தும் கடந்த சில போட்டிகளாக சென்னை அணியால் ரன்களை கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் சென்னை அணியின் புதிய பந்து வீச்சாளர் நிகிடியை தான் சென்னை அணி பெரிதும் நம்பியுள்ளது. சென்னை அணியில் அனுபவமிக்க பௌலர்களான பிராவோ,வாட்சன், இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் இருந்தாலும் இவர்களின் பந்துகளை எதிரணி வீரர்கள் எளிதாக கணித்து விடுகின்றனர். ஆனால் புதிய வீரரான நிகிடி போடும் பந்துகள் சற்று கணிக்க நேரம் எடுத்துக் கொள்ள படும் என்பதால் இவர் கொல்கத்தா ரன் குவிப்பை குறைப்பார் என்று எதிர்பார்கபடுகிறது.

Advertisement