அடுத்த ஐ.பி.எல் தொடரில் போட்டிகள் எவ்வாறு நடைபெறும் தெரியுமா ? – 10 அணிகளை வைத்து பி.சி.சி.ஐ போட்ட புதிய திட்டம்

ipl trophy
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கிய ஐ.பி.எல் தொடர் ரசிகர்களின் பேராதரவுடன் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருட ஐ.பி.எல் தொடர் கொரோனா அச்சம் காரணமாக நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் பி.சி.சி.ஐ நிர்வாகத்தின் சிறப்பான ஏற்பட்டால் ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 ஆவது ஐ.பி.எல் தொடர் அருமையாக நடைபெற்று முடிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் குறித்த செய்திகள் தற்போதே ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

mi

- Advertisement -

மேலும் அடுத்த வருடம் நடக்கப்போகும் ஐபிஎல் தொடர் 10 அணிகளைக் கொண்டு நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்துவிட்டது. இதற்காக தற்போது பல்வேறு ஆயத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 10 அணிகள் கொண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுவது இது முதல் முறை அல்ல ஏற்கனவே 2011ஆம் ஆண்டு தற்போது இருக்கும் அணிகளை தாண்டி கொச்சி மற்றும் புனே ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டு இருந்தது.

அதன் பின்னர் கொச்சி அணிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் பிரச்சனையாக அடுத்த இரண்டு வருடங்களுக்கு 9 அணிகள் வைத்து விளையாடப்பட்டது. பின்னர் புனே அணிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் பிரச்சனை உருவாக அப்போதில் இருந்து தற்போது வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றன. இதன் காரணமாக தரமான 8 அணிகள் இந்த தொடரில் மோதி வருகின்றன.

ipl

இந்நிலையில் அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் வைத்து ஐபிஎல் தொடர் நடக்கும் என்று அறிவித்திருந்தனர். தற்போது நடைபெறுவதைப் போலவே ஒவ்வொரு அணியும் 14 போட்டிகள் கொண்ட லீக் சுற்று விளையாடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 10 அணிகளையும் இரண்டு பிரிவாக ஐந்து ஐந்து அணிகளாக பிரிக்கப்படும்.

ipl-2020

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள நான்கு அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி இருக்கும். அதனை தாண்டி மற்ற பிரிவில் இருக்கும் ஐந்து அணிகளில் முதல் நான்கு அணிகளுடன் ஒரு போட்டியும் ஐந்தாவது அணியுடன் 2 போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் விளையாடியிருக்கும். மொத்தமாக இப்படி 14 போட்டிகளில் லீக் சுற்றில் விளையாடும். அதனைத் தொடர்ந்து வழக்கம்போல் பிளே ஆப் சுற்று, செமி பைனல் மற்றும் இறுதிப் போட்டிகளும் நடைபெறும்.

Advertisement