சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் இவர்தான். ஆனால் அது ரெய்னா இல்லை – அடுத்த கேப்டன் யார் தெரியுமா ?

CSKShop
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 12 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது பதிமூன்றாவது சீசனுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரம்பத்திலிருந்து தோனியே இதுவரை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

csk

இதுவரை அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணியாக திகழ்கிறது. மேலும் தோனியின் தலைமையில் இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வரவிருக்கும் ஐபிஎல் தொடர் அல்லது அடுத்த தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனால் தோனிக்கு பின்னர் சி.எஸ்.கே அணியின் கேப்டன் என்ற ஆவல் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில் தோனிக்கு இப்போது 39 வயதாகிறது அடுத்த வருடத்திற்கு 40 வயது ஆகி விடும் அதன் பின்னர் அவர் கிரிக்கெட் விளையாடுவது சற்று கடினம் தான். இதனால் அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்து வருவகிறது.

csk vs dc

பெரும்பாலும் பலர் கண்ணை மூடிக்கொண்டு சுரேஷ் ரெய்னா தான் அடுத்த கேப்டன் என்று கூறுகின்றனர். ஆனால் தற்போது உள்ள பல்வேறு சூழ்ந்து பார்க்கும்போது சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு குறைவுதான். ஏனெனில் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற போது அவருக்கு வயது 27 எனவே நீண்ட காலம் இருக்க வேண்டும் என்று சிஎஸ்கே எதிர்பார்த்து தோனியை கேப்டன் ஆக்கியது அதேபோன்று அடுத்து வரவிருக்கும் கேப்டனும் சிறிது காலம் நீடிக்க விரும்பும்.

- Advertisement -

அதன்காரணமாக சிஎஸ்கே நிர்வாகம் எப்படி கேப்டனை தெரிவு செய்யும் என்று நம்மால் எளிதாக யூகிக்க முடியாது. இருப்பினும் ஒருவேளை சுரேஷ் ரெய்னா கேப்டன் ஆகவில்லை என்றால் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஒருவரே கேப்டனாக நிர்வாகம் நியமிக்க நினைக்கும் அப்படிப் பார்த்தால் தற்போது சிஎஸ்கே அணியில் அனைவரை விட இளம் வயது வீரர்கள் என்று பார்க்கும்போது அனுபவத்துடன் கூடிய ரவிந்திர ஜடேஜா கேப்டனாக அதிக வாய்ப்பு உள்ளது.

jadeja

ஏனெனில் தோனியின் தலைமையில் பல ஆண்டுகள் விளையாடியுள்ள அவர் இன்னும் நான்கைந்து ஆண்டுகள் விளையாட முடியும் அவருக்கு தற்போது 33 வயதுதான் ஆகிறது. எனவே அவர் அடுத்து சிஎஸ்கே அணியை வழிநடத்த ஒரு சிறப்பான வீரராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement