கிரிக்கெட்டில் அயர்லாந்தை துவைத்தெடுத்த நியூஸிலாந்து.! உலகசாதனை படைத்த நியூஸிலாந்து மகளீரணி..!

womenscricket
- Advertisement -

அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளீராணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

newzeland

- Advertisement -

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸை கேப்டன் சூஸே பேட்ஸ் மற்றும் ஜெஸ் வாட்கின் ஆகியோர் தொடங்கினர். அயர்லாந்து பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே பதம்பார்த்த இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்தது. வாட்கின் 59 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு மேடி கிரீனுடன் கைகோத்த சூஸே பேட்ஸ், அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 94 பந்துகளில் 151 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 24 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த சேட்டர்த்வொயிட் 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஐந்தாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய அமீலியா கெர் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். 77 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில், 15 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

ierland

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது நியூசிலாந்து அணிமகளிர் கிரிக்கெட்டில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் படைத்த தனது சொந்த சாதனையை நியூசிலாந்து மகளிர் அணி இன்று முறியடித்தது. கடந்த 1997ம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 455 ரன்கள் குவித்திருந்தது. சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அதிகபட்ச ஸ்கோராக இருந்துவந்தது.

Advertisement