சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிக்கு அந்த தோல்வி சமம்.. மோடியை கிண்டலடித்து இந்தியாவை வாழ்த்திய நியூஸி பிரதமர்

IND vs NZ PMs
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கு தோல்வியே சந்திக்காமல் இந்தியா 12 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் 3 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் இந்தியா உலக சாதனை படைத்தது.

முன்னதாக 2000 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து கோப்பையை வென்றது. அதை விட 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இந்திய அணியை நியூஸிலாந்து நாக் அவுட் செய்ததை மறக்கவே முடியாது. அந்த தோல்வி கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்ததை மறக்க முடியாது.

- Advertisement -

நியூஸிலாந்து பிரதமர் கிண்டல்:

அந்த ரணம் ஆறுவதற்குள் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து கோப்பையை வென்றது. அதற்கு 2023 உலகக் கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபியில் லீக் மற்றும் இறுதிப்போட்டியில் தோற்கடித்து கோப்பையை வென்று பதிலடி கொடுத்தது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கு இருநாட்டு உறவுகள் பற்றி பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தோல்விக்கு கடந்த வருடம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து தோற்கடித்தது சமம் என்று அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேருக்கு நேராக கிண்டலடித்தார். அத்துடன் இந்திய அணிக்கு அவர் மனதார வாழ்த்தும் தெரிவித்தார்.

- Advertisement -

வாழ்த்திய பிரதமர்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சமீபத்தில் இந்தியாவிடம் துபாயில் நாங்கள் சந்தித்த தோல்வியை பற்றி பிரதமரிடம் நான் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே போல இந்தியாவில் டெஸ்ட் தொடரில் நாங்கள் பதிவு செய்த வெற்றியைப் பற்றியும் பேசவில்லை. அதை அப்படியே வைத்து ஒரு பெரிய ராஜதந்திர சம்பவத்தை தவிர்ப்போம்”

இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயர் வந்ததால் எங்களோட அந்த பல ஆண்டு கனவு நிறைவேறும் – பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் நம்பிக்கை

“மோடி பிரதமராக இருக்கும் காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் டாமினேட் செய்து வருகிறது. சமீபத்தில் துபாயில் அவர்கள் எங்களுடைய நியூசிலாந்துக்கு எதிராக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றார்கள். அது என்னையும் சேர்த்து பல நியூசிலாந்து மக்களின் இதயங்களை நொறுக்கியது. இருப்பினும் அதற்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று கூறினார். அதைக் கேட்டு பிரதமர் மோடியும் அரங்கத்தில் இருந்தவர்களும் சிரித்தார்கள்.

Advertisement