இலங்கை மலைப்பாதையில் பிரேக் டவுன் ஆன நியூசி வீரர்கள் சென்ற பேருந்து. திக் திக் நிமிடங்கள் – வீடியோ இதோ

NZ
- Advertisement -

நியூசிலாந்து அணி தற்போது இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டிற்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிந்தது.

- Advertisement -

இதனை அடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்க உள்ளது. இந்நிலையில் கண்டிக்கு பஸ் மூலம் நியூசிலாந்து வீரர்கள் தங்களது ஹோட்டலை நோக்கி சென்றார்கள். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற பேருந்து மலைப்பாதையில் பிரேக் டவுன் ஆனது. இதனால் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் சிறிது நேரம் தவிர்த்து விட்டனர்.

அதன் பிறகு விடயம் இலங்கை அணி நிர்வாகத்துக்கு செல்ல அவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களை அணுகி அங்கிருந்து வீரர்களை மீட்டு ஹோட்டல் அறைக்கு சேர்த்தனர். இந்த விடயத்தை நியூஸிலாந்து மேனேஜர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement