- Advertisement -
உலக கிரிக்கெட்

1886 நாட்கள்.. 5 வருடம்.. அப்படின்னா நியூஸிலாந்து டம்மி சாம்பியனா? வங்கதேசத்தை விட மோசமான சாதனை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஸ் செய்து இலங்கை கோப்பையை வென்றது.

அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு தொடரை வென்று இலங்கை சாதனையும் படைத்தது. மறுபுறம் 2வது போட்டியில் 88 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

நியூஸிலாந்து படுதோல்வி:

அதனால் சமன் செய்யும் வாய்ப்பை நழுவ விட்ட நியூசிலாந்து 15 வருடங்கள் கழித்து இலங்கையிடம் தோல்வியை சந்தித்தது. இவை அனைத்தையும் விட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அதில் விராட் கோலி தலைமையில் சக்கை போடு போட்ட இந்தியா 520 புள்ளிகளுடன் 1.577% புள்ளிகளை பெற்று முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

மறுபுறம் 420 புள்ளிகளுடன் 1.28% புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை மட்டுமே பிடித்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் லாக்டவுன் வந்ததால் புள்ளிகளுக்கு பதிலாக அதிக சதவீதம் புள்ளிகளைக் கொண்ட அணிகள் ஃபைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனால் 442 புள்ளிகளுடன் 1.12% புள்ளிகளை பெற்று 2வது இடத்திலிருந்த இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளிய நியூசிலாந்து அதிர்ஷ்டத்துடன் (1.28%) ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

1886 நாட்களாக:

இறுதியில் சௌதம்டன் நகரில் நடைபெற்ற 2021 ஃபைனலில் மழைக்கு மத்தியில் சுமாராக விளையாடிய இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் அப்போதிலிருந்து இதுவரை நியூசிலாந்து வெளிநாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கப்பட்ட 2019 முதல் இதுவரை நியூசிலாந்து தங்களுடைய சொந்த மண்ணுக்கு வெளியே கடந்த 1886 நாட்களாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்லவில்லை.

இதையும் படிங்க: ஜெயசூர்யா மேஜிக்.. 15 வருடம் கழித்து சாதித்த இலங்கை.. இந்தியாவின் 2021 வில்லன் நியூஸிலாந்துக்கு நேர்ந்த சோகம்

இதன் வாயிலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் வெளிநாட்டில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத ஒரே அணியாக நியூசிலாந்து மோசமான சாதனை படைத்துள்ளது. வங்கதேசம் கூட சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 2 வெற்றிகளை பெற்றது. மொத்தத்தில் இதை பார்க்கும் போது அதிர்ஷ்டத்துடன் 2021 ஃபைனலில் நுழைந்து கோப்பையை வென்ற நியூசிலாந்து வெளிநாட்டில் ஒரு போட்டியை கூட வெல்லாததால் டம்மி சாம்பியனா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசுகின்றனர்.

- Advertisement -