இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மோசமான சாதனையை படைத்த – நியூசிலாந்து

Ind-vs-Nz
- Advertisement -

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.

ind nz

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக நேற்று முழுவதும் போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டதால் ரிசர்வ் டே ஆன இன்று விளையாட உள்ளது. எந்த இடத்தில் அவர்கள் ஆட்டத்தை கைவிட்டார்களோ அதே இடத்திலிருந்து ஆட்டத்தை தொடருவார்கள். இந்த ஆட்டம் முழுமையாக நடந்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Bhuvi

நெற்றியை போட்டியில் நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்கள் பவர்பிளேயில் 1 விக்கெட்டை இழந்து வெறும் 27 ரன்களை மட்டுமே அடித்தது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் பவர்பிளே ஓவர்களில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவாகி உள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாரின் மிரட்டலான பந்துவீச்சினால் நியூசிலாந்து அணியினர் ரன் குவிக்க திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement