ஆர்ச்சரை காயப்படுத்திய நியூசிலாந்து ரசிகர். மன்னிப்பு கேட்ட கேன் வில்லியம்சன்

Archer
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

Nz vs Eng

- Advertisement -

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின்போது பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரை மைதானத்தில் இருந்த நியூஸிலாந்து ரசிகர் ஒருவர் அவரது நிறம் குறித்து தவறான வார்த்தைகளால் அவரை சாடினார்.

நியூசிலாந்து ரசிகர் செய்த செயல் தெளிவாக மைதானத்தில் இருந்த கேமராவில் பதிவானது. மேலும் ஆர்ச்சர் அந்த ரசிகரின் இந்த தகாத வார்த்தைகளால் மனதளவில் மிகவும் காயமடைந்தார். இந்நிலையில் இதுகுறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஆர்ச்சரை தவறான வார்த்தைகளால் சாட்டப்பட்டது கேள்விப்பட்டு எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

Archer 1

எங்களது ரசிகர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கேன் வில்லியம்சன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 29ஆம் தேதி ஹேமில்டன் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement