இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து சரித்திரம் படைத்தது.
மேலும் கடந்த 12 வருடங்களாக 18 தொடர்களில் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் வென்று வந்த இந்திய அணியின் வெற்றி நடையையும் நியூசிலாந்து உடைத்துள்ளது. மறுபுறம் அவமானத் தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் பயணத்தில் பின்னடைவையும் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் ஃபைனலுக்குச் செல்ல நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் வெல்ல வேண்டும்.
நாங்க பறிப்போம்:
அத்துடன் அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3 வெற்றிகளை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் நடைபெறும் 3வது போட்டியிலும் வென்று இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒய்ட்வாஸ் செய்வோம் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அப்படியே அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெல்வோம் என்று அவர் கூறியுள்ளார். அந்த 4 வெற்றிகளை பெற்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியாவை தகுதி பெற விடாமல் நியூஸிலாந்து தகுதி பெறும் என்றும் கேரி ஸ்டெட் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். 2021இல் தகுதி பெற்றது போலவே இம்முறையும் நியூஸிலாந்து ஃபைனலுக்கு செல்வதற்கு உள்ள வாய்ப்பு பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
2021 மாதிரி:
“2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற நாங்கள் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அதை நாங்கள் செய்தும் காட்டினோம். அதே போல இம்முறையும் நாங்கள் மீண்டும் செய்வோம் என்று நம்புகிறோம். இதற்கு முன் நாங்கள் அதை செய்துள்ளோம். அதே போன்ற வெற்றியை மீண்டும் பதிவு செய்ய ஸ்பெஷலான வாய்ப்பு கிடைத்துள்ளது”
இதையும் படிங்க: 8இல் வெறும் 1 தானா? இதெல்லாம் கம்மி.. 11 மேட்ச்ல நிரூப்பிக்கலான ரோஹித்தை கழற்றி விடலாம்.. ஆகாஷ் சோப்ரா
“இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை. ஆனால் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வெற்றி பெற விரும்புகிறோம். மும்பையில் செம்மண்ணால் உருவாக்கப்பட்டுள்ள ஆடுகளம் வித்தியாசமாக இருக்கலாம். அதற்கு நாங்கள் வேகமாக எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப் போட்டியில் இன்னும் ஒரு வெற்றியை பெறுவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்வதற்கான எங்களுடைய வாய்ப்பை அதிகரிக்கும்” என்று கூறினார்.



